நேருவின் கணிப்பை நிஜமாக்கியவர் வாஜ்பாய்

அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உரை நிகழ்த்துவதிலும், அவரது சொற்பொழிவு
நேருவின் கணிப்பை நிஜமாக்கியவர் வாஜ்பாய்


அரசியல் அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உரை நிகழ்த்துவதிலும், அவரது சொற்பொழிவு பார்ப்போரையும், கேட்போரையும் கட்டிப் போடும் பேச்சுக்கு சொந்தக்காரர். 

பாரதிய ஜன சங்க நிறுவனர் ஷ்யாம் பிரசாத் மொகர்ஜி ஒருமுறை காஷ்மீர் செல்கிறார். அவருடன் உதவிக்காக வாஜ்பாயும் செல்கிறார். அப்போது முன்பதிவு செய்யப்படாத ரயில் டிக்கெட் பெற்றுக்கொண்டு இருவரும் ரயிலில் செல்ல புறப்பட்டபோது, மொகர்ஜியை கைது செய்ய அரசு உத்தரவிட, மொகர்ஜி கைது செய்யப்படுகிறார். அப்போது காஷ்மீரை ஏன் இந்தியாவோடு முழுமையாக இணைக்க வேண்டும் என்று தனது நோக்கத்தை வாஜ்பாயிடம் சொல்லி அனுப்புகிறார். 

மொகர்ஜியின் வார்த்தைகளை வேத வாக்காக கொண்டு இந்தியா முழுக்க சுற்றிய வாஜ்பாய், பல இடங்களில் உணர்ச்சிமிக்க உரையை நிகழ்த்தினார். அவரது அனல் தெரித்த பேச்சுகளை பலரும் உற்றுநோக்க தொடங்கினர். தேர்தல் வந்தது, போட்டியிட்டு வெற்றிபெற்ற வாஜ்பாய் மக்களவைக்கு சென்றார். அவரது உரை நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் அரசை கடுமையாக தாக்கி பேசினார். அதுபோன்ற உரையை நாடாளுமன்றம் இதற்கு முன்னர் கண்டதில்லை என்னும் அளவுக்கு இருந்தது. அப்போதும் அவையில் இருந்த அனைத்து கட்சியின ரும் பேதமின்றி பாராட்டினார்கள். 

ஒரு முறை வெளிநாட்டு விருந்தினர்கள் இந்தி வருகை தந்தபோது, அவர்களை சந்திக்க வாஜ்பாய்க்கு அழைப்பு விடுக்க, வெளிநாட்டு விருந்தனர்களிடம் அப்போதைய பிரதமர் நேரு அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார். வாஜ்பாயை பார்த்ததும் ஒரு புன்முறுவலோடு கை குலுக்கிய நேரு, விருந்தினர்களை பார்த்து "இந்த இளை]ன் ஒரு நாள் இந்தியான் பிரமராவன்" என தெரிவித்தார். விருந்தினர்கள் அனைவரும் வாஜ்பாயை வியந்து பார்த்தனர். 

நேருவின் கணிப்பு உண்மையானது. ஒரு முறை அல்ல 3 முறை இந்திய பிரதமரானார் வாஜ்பாய். காங்கிரஸ் அல்லாது 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்த பெருமையையும் சேர்த்தே பெற்றார் வாஜ்பாய்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com