நேருவின் புகைப்படம் எங்கே என கேட்டு கர்ஜித்தவர் வாஜ்பாய்!

நாடாளுமன்றத்தில் வாஜ்பாயும் நேருவும் எலியும் பூனையுமாக இருந்தாலும், 1977-இல் மொரார் தேசாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை
நேருவின் புகைப்படம் எங்கே என கேட்டு கர்ஜித்தவர் வாஜ்பாய்!


நாடாளுமன்றத்தில் வாஜ்பாயும் நேருவும் எலியும் பூனையுமாக இருந்தாலும், 1977-இல் மொரார் தேசாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற வாஜ்பாய், பதவியேற்பு நிகழ்வுக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் சவுத் பிளாக்கில் உள்ள தனது அலுவலக அறைக்கு உள்ள சென்றவர், சிறிது நேரத்தில் வெளியே வந்து ஊழியர்களை அழைத்தார்.

ஊழியர்கள் பதறிக்கொண்டு சென்றபோது, இங்கே இருந்த முன்னாள் பிரதமரின் நேருவின் புகைப்படம் எங்கே என்று கோபமாக கேட்க, ஆட்சி மாறியதால் அதனை அகற்றி விட்டோம் என பதில் அளித்தனர்.

கோபம் அடைந்த வாஜ்பாய், இன்னும் சில் நிமிடங்களில் அந்த புகைப்படம் இங்கே முன்னரே இருந்த அதே இடத்தில் இருக்க வேண்டும், நான் திரும்பி வரும்போது அதனை பார்க்க வேண்டும் என்று கடிந்துவி்டடு சென்றுவிட்டார்.

ஊழியர்கள் உடனடியாக அந்த புகைப்படத்தை எடுத்து வந்து அங்கே கொண்டு பின்னரே சாந்தம் அடைந்தார் வாஜ்பாய். 

வாஜ்பாய் மற்றும் நேருவின் இடையேயான உறவு மிகவும் ஆரோக்கியமான ஒன்றாகவே இருந்த வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com