விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தின் தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா தேர்வு!

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ”ககன்யான்” திட்டத்திற்கான தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகாவை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. 
விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் விண்வெளி திட்டத்தின் தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகா தேர்வு!


புதுதில்லி: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ”ககன்யான்” திட்டத்திற்கான தலைவராக வி.ஆர்.லலிதாம்பிகாவை இஸ்ரோ தேர்வு செய்துள்ளது. 

விண்வெளி ஆய்வில் பல மைல்கல் திட்டங்களை நிறைவேற்றி வரும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. ககன்யான் என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டம் 2022-ம் ஆண்டுக்குள் செயல்படுத்தப்படும் என தில்லியில் புதன்கிழமை நடந்த சுதந்திர தினவிழாவில் பேசும்போது, பிரதமர் மோடி தெரிவித்தார்.  

இதைத்தொடர்ந்து இந்த திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், செய்தியாளர்களிடம் பேசுகையில்,  நாட்டுக்கு பிரதமர் வழங்கிய மிகச்சிறந்த பரிசு ககன்யான் திட்டம் எனவும், இந்த திட்டம் இந்தியாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தளத்தை மிகவும் உயர்ந்த ஒரு மட்டத்துக்கு கொண்டு செல்வதுடன், இளம் தலைமுறையினருக்கு உந்துசக்தியாகவும் அமையும் எனவும் தெரிவித்தார்.  

மேலும், இந்த திட்டத்தின் 70 சதவீத பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும், இந்த திட்டத்துக்கு பயன்படுத்தும் ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டையும் நாங்கள் வடிவமைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  இதற்கான கட்டுப்பாட்டு மையம், ஏவுதளம் மாற்றி அமைப்பு, கருவிகள் இணைப்பு போன்ற சில கட்டமைப்பு பணிகள் மட்டுமே மீதம் உள்ளதாகவும், இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன், 2 ஆளில்லா விண்கலங்களை இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் செலுத்தி சோதனை மேற்கொள்வோம் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கான தலைவராக 30 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவரான வி.ஆர்.லலிதாம்பிகாவை இஸ்ரோ தலைவர் கே.சிவன் தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இணை இயக்குநராக இருந்தவர் லலிதாம்பிகா என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com