மீன் விற்று படிக்கும் மாணவி கேரள மழை வெள்ளத்திற்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி

கேரள மக்களால் கேலியும் கிண்டல் செய்யப்பட்ட மீன் விற்று படிக்கும் மாணவி தனக்கு கிடைத்த நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு
மீன் விற்று படிக்கும் மாணவி கேரள மழை வெள்ளத்திற்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி


கேரள மக்களால் கேலியும் கிண்டல் செய்யப்பட்ட மீன் விற்று படிக்கும் மாணவி தனக்கு கிடைத்த நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்க இருப்பதாக கல்லூரி மாணவி ஹனன் ஹமீது தெரிவித்துள்ளார்.

கல்லூரியில் படித்துக்கொண்டே குடும்ப வறுமை காரணமாக மீன் விற்று படித்து வருபவர் மாணவி ஹனன் ஹமீது. இவரை பற்றி மலையாள நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியிட்டிருந்தது. இவரது முயற்சியை பாராட்டி பலரும் உதவ முன் வந்தனர். அதே சமயம் மாணவி ஹனன் ஹமீது பிரபலத்துக்காக இவ்வாறு செய்து வருவதாக சிலர் கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர். இந்த செய்தியானது கேரள முதல்வர் பிரணாய் விஜயன் வரை சென்றது. மாணவி ஹனனின் மன உறுதியை பாராட்டிய கேரள முதல்வர் அவரை  “கேரள அரசின் மகள்” என்று கூறியிருந்தார். இதன் பின் ஹனனை கடுமையாக விமர்சித்தவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனிடையே ஹனன் ஹமீதுக்கு பலர் ஆதரவு கரம் நீட்டி, பண உதவிகளும் செய்தனர்.

இந்நிலையில், வரலாறு காணாத மழை வெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது கேரள மாநிலம். இந்தநிலையில் தனக்கு ஆதரவு கரம் நீட்டி, பண உதவிகளும் செய்தனர். அவர்களிடம் இருந்து பெற்ற நன்கொடையில் ரூ.1.5 லட்சத்தை அவர்களுக்கே உதவும் வகையில் முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் ஹனன். 

நிதியுதவிக்கான தொகையை உடனடியாக டிரான்ஸ்பர் செய்ய செல்லிடைப்பேசி வேலை செய்யவில்லை. அதோடு வங்கிகளும் மூடப்பட்டுள்ளது. எனவே, ஓரிரு நாட்களில் தொகை முழுவதையும் முதல்வர் பேரிடர் நிவாரண நிதியின் வங்கிக்கு கணக்கு பரிமாற்றம்  செய்வதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com