கேரளாவுக்கு அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒருமாத
சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர்.
சேலத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதல்வர்.

வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு அதிமுக எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 

நீலகிரி வனத்தில் பெய்த கன மழையால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டியது. இதனால், செவ்வாய்க்கிழமை இரவு அணைக்கு வந்த 10 ஆயிரம் கன அடி உபரி நீரை அப்படியே பவானி ஆற்றில் திறந்துவிட்டனர். அதைத் தொடர்ந்து, நீர்வரத்து 20 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக 45 ஆயிரம், 60 ஆயிரம், 75 ஆயிரமாக உயர்ந்தது. அணைக்கு வந்த உபரி நீரை அப்படியே ஆற்றில் திறந்துவிட்டனர். இதனால், பவானி ஆறு கரைபுரண்டு ஓடியது. ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. 

ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ள நீர் கிராமங்களைத் தாண்டி சாலையில் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாழை, நெல், மஞ்சள் பயிர்கள் சேதமடைந்தன. 

இந்நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோருடன் சென்று ஆய்வு செய்ததுடன் குறைகளையும் கேட்டறிந்தார்.   

பின்னர் நிவாரண முகாம்கங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவைகளை முதல்வர் வழங்கினார்.  னர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வேட்டி, சேலை, உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை முதல் அமைச்சர் வழங்கினார். இதனை தொடர்ந்து வெள்ளம் பாதித்த பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர், இதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என உறுதி அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் முதல்வர் பழனிசாமி கூறுகையில், பவானியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம். தண்ணீர் வடிந்தவுடன் பயிர் சேதம் கணக்கிடப்பட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் உதவிகள் அளிக்கப்படும். 

வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை புதுப்பித்துத் தர அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் காவிரியில் திறக்கப்பட்ட நீர், இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கடை மடை பகுதிக்கு சென்றடையும். மழை நீர் வீணாவதை தடுக்க, தடுப்பணை கட்டுவது குறித்து குழு அறிக்கை அளித்ததும் முடிவு எடுக்கப்படும் என்றார். 

மேலும், வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு உணவு, உடை உட்பட அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கேரள பேரிடர் நிவாரண நிதியுதவிக்காக, அதிமுக எம்.எல்.ஏ மற்றும் எம்.பி.க்கள் தங்களது ஒருமாத ஊதியத்தை வழங்குவர் என்றும் தமிழக மக்களும் தங்களால் இயன்ற உதவிகளை கேரள மக்களுக்கு மனமுவந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com