குடகுக்கு ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வர் குமாரசாமி கோரிக்கை

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்கு ரூ.100 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
குடகுக்கு ரூ.100 கோடி நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வர் குமாரசாமி கோரிக்கை

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்திற்கு ரூ.100 கோடி நிவாரண நிதி வழங்க மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 

கர்நாடகத்தின் தென் மேற்கு பகுதியில் மலை, குன்று, ஆறு, குளம், குட்டை, தாவரம், விலங்குகள் போன்ற இயற்கை வளங்களோடு செழிப்பாக காட்சி தந்த குடகு மாவட்டத்தில் வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. 1994-ஆம் ஆண்டுக்குப் பின்னர், தென் மேற்கு பருவமழை சீற்றத்துடன் இருப்பது மக்களை நிலைகுலைய செய்துள்ளது.

இந்நிலையில், குடகு மாவட்ட பாதிப்பு குறித்து முதல்வர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு நிவாரண உதவியாக ரூ.500 கோடி வழங்குவதாக பிரதமர் அறிவித்திருந்தார். அதே போல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு குறைந்தது ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் குமாரசாமி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 
வெள்ளத்தால் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய வேண்டும். நாங்கள் ராணுவம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரின் உதவியை பெற்று வருகிறோம். 

வெள்ளம் சூழ்ந்த குடகு மாவட்ட பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் 2 நாட்களாக ஆய்வு பணிகளை மேற்கொண்டேன். பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மழைக்கு இதுவரை 12 பேர் மரணம் அடைந்துள்ளனர். 845 வீடுகள் முழுவதுமாகவும், 773 வீடுகள் பாதி அளவும் சேதம் அடைந்துள்ளன. மொத்தம் 6620 பேர் வெள்ளத்தில் மீட்கப்பட்டு குடகு மற்றும் தட்சன கன்னடா நிவாரண முகாம்களில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிவாரண முகாம்களில் அரசு சார்பில் போதுமான குடிநீர், பால், உணவு வசதிகள் கொடுக்கப்பட்டு வருகிறது எனக் கூறினார். 

மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு மாவட்டத்திற்கு நிவாரணம் வழங்க மத்திய அரசு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதல்வர் குமாரசாமி மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதனிடையே நேற்று திங்கள்கிழமை கர்நாடக துணை முதல்வர் பரமேஸ்வரா குடகு மாவட்டத்திற்கு தேவையான வெள்ள நிவாரண நிதி உதவிகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

மழைச்சாரலில் குடையைப் பிடித்து ஒய்யாரமாக நடந்துவந்த மக்களை, கடந்த ஒரு மாதகாலமாக பெய்த காட்டுமழை வீட்டுக்குள் அடைத்துவிட்டது. 1994-ஆம் ஆண்டுக்கு பிறகு நிகழாண்டில் ஜூன் 1-ஆம் தேதி முதல் தென்மேற்கு பருவ மழை மிகுந்த சீற்றத்துடன் காணப்பட்டதாக மக்கள் கூறுகிறார்கள். நிகழாண்டில் வழக்கத்தைவிட 83 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குடகு மாவட்டத்தின் வரலாற்றில் இதுவரை காணாத மழையின் கோபக்கனலை மக்கள் அனுபவித்துவருகிறார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com