சித்து தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் சஞ்சய் ஜாட்

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லமாபாதுக்குச் சென்று, இம்ரான் கானின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றற பஞ்சாப் அமைச்சா் சித்துவின் தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து, ராஷ்ட்ரீய பஜ்ரங் தள பிரமுகா் காணொளி
சித்து தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்தார் சஞ்சய் ஜாட்

ஆக்ரா: பாகிஸ்தான் தலைநகா் இஸ்லமாபாதுக்குச் சென்று, இம்ரான் கானின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றற பஞ்சாப் அமைச்சா் சித்துவின் தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி அறிவித்து, ராஷ்ட்ரீய பஜ்ரங் தள பிரமுகா் காணொளி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
ராஷ்ட்ரீய பஜ்ரங் தளத்தின் ஆக்ரா மாவட்டத் தலைவரான சஞ்சய் ஜாட் வெளியிட்டுள்ள காணொளியில், சித்துவின் செயலால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும், சித்துவை நம்பிக்கைத் துரோகி என்றும் குறிப்பிட்டுள்ளாா். மேலும், அவரது தலைக்கு ரூ.5 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்து, அதற்கான காசோலையும் தயாராக இருப்பதாகவும் அந்தக் காணொளியில் ஜாட் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com