பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை: கியூபா ஊடகங்கள் தகவல்

கியூபாவின் முன்னாள் அதிபரும் கியூபா புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட்(68) இன்று காலை தற்கொலை
பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை: கியூபா ஊடகங்கள் தகவல்

ஹவானா: கியூபா முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்து கொண்டார் என கியூபா அரசின் செய்தி இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

கியூபாவின் முன்னாள் அதிபரும் கியூபா புரட்சியாளருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் டியஸ் பலர்ட்(68) இன்று காலை தற்கொலை செய்து கொண்டதாக கியூபா அரசின் இணையதளத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

பிடலிடோ அல்லது லிட்டில் பிடல் என்றும் அறியப்படும் பலர்ட், கடந்த சில மாதங்களாகவே மன அழுத்த பிரச்சினை காரணமாக டயஸ் பலார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிலநாட்களுக்கு முன்புதான், மருத்துவமனையிலிருந்து இல்லம் திரும்பிய டியஸ் பலர்ட், இல்லத்திலேயே சிகிச்சை பெற்றுவந்ததாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று அதிகாலை தனது இல்லத்தில், டயஸ் பலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக அந்த நாட்டு அரசால் நடத்தப்படும் செய்தி இணையதளத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது.  

காஸ்ட்ரோ டியஸ் பலர்ட், மறைந்த முன்னாள் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் முதல் மனைவி மிர்டா டயஸ்-பாலார்ட்க்கு பிறந்த ஒரே மகன் ஆவார். 

மறைந்த டியஸ் பலர்ட், முன்னாள் சோவியத் யூனியனில், அணு இயற்பியல் படித்திருந்த அவர், கியூபா சயின்ஸ் அகாதமி மையத்தின் துணை தலைவராகவும், கியூபா அரசின் அறிவியல் ஆலோசகராகவும் பணியாற்றியவர். 

பல்வேறு  புத்தகங்களை எழுதியுள்ளார். உலகம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு சர்வதேச அளவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கியூபா பிரநிதியாக கல்வி தொடர்பான நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

கியூபாவில் ராணுவ ஆட்சியாளரான பாடிஸ்டாவிடம் இருந்து ஆட்சியைப் பறித்து மீண்டும் மக்களுக்கே கொடுத்தவர் காஸ்ட்ரோ. கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோ, கியூபாவின் அதிபராக இருந்தார். சேகுவேராவின் நண்பராகவும், சக போராளியாகவும் இருந்தவர் காஸ்ட்ரோ. அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமாக இருந்து வந்த காஸ்ட்ரோ கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி உயிரிழந்தார். 

மிர்டா டயஸ்-பாலார்ட் விவாகரத்து பெற்ற பின்னர் அமெரிக்காவில் தனது தாயின் குடும்பத்துடன் வாழ்ந்து வந்த டியஸ் பலர்ட், 1955-இல் மெக்ஸிகோவுக்கு பிடல் காஸ்ட்ரோ வந்ததுபோது அவரை சந்திக்க அவரது தாய் மிர்டா அனுமதிக்க மறுத்துவிட்டார்.

கம்யூனிச புரட்சியாளரான காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் கியூபா மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com