திரிபுராவில் தாமரை ஆட்சி மலரும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, ஊழலில் மலிந்து கிடக்கும் இடதுசாரி அரசை அகற்றி தாமரை ஆட்சி மலரும் என பாஜக மூத்த
திரிபுராவில் தாமரை ஆட்சி மலரும்: ராஜ்நாத் சிங் நம்பிக்கை

அகர்தலா: திரிபுராவில் சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு, ஊழலில் மலிந்து கிடக்கும் இடதுசாரி அரசை அகற்றி தாமரை ஆட்சி மலரும் என பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

திரிபுரா மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. 60 உறுப்பினர்களை கொண்ட இந்த பேரவை காலம் அடுத்த மாதம் முடிகிறது. இதையடுத்து, திரிபுரா மாநில பேரவைக்கான தேர்தல் வரும் 18-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை மார்ச் 3-ஆம் தேதியும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்து அறிவித்து பிரசார பணியில் ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தலில் 297 பேர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தலைநகரில் உள்ள இந்திரா நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் உள்துறை அமைச்சக் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த பொதுக்கூட்டத்துக்கு திரண்டு வந்துள்ள மக்களை பார்க்கும்போது, இந்த பேரவை தேர்தலுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி வெளியேறி விடும் என்றே தோன்றுகிறது.

கடந்த 25 ஆண்டுகளாக சி.பி.ஐ.(எம்) அரசு ஊழல்கள் மற்றும் திறமையற்ற நிர்வாகத்தால் மாநிலத்தை சீரழித்துள்ளனர். அதிலிருந்து மக்களை காப்பதற்காக சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு திரிபுராவில் தாமரை மலரும் நிலை ஏற்பட்டுள்ளது.

"எந்தவொரு மாநில வளர்ச்சிக்கும் எந்தவொரு அரசுக்கும், மாநிலத்திற்கும் 25 ஆண்டு காலம் தேவைப்படாது. ஆனால், திரிபுராவில் மட்டும் பல பேர் ரூ.1000 மதிப்புடைய சைக்கிளையே வைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ஜார்கண்டில் நல்ல ஆட்சி நடைபெற்று வருகிறது. நாட்டு மக்கள் நல்ல ஆட்சியை பாஜக ஆட்சியின் கீழ் மட்டுமே அனுபவிக்க முடியும். எனவே, அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை காண வேண்டும் என்றால் பாஜகவுக்கு வாய்ப்பை வழங்குங்கள் என்றார் ராஜ்நாத் சிங்.

மேலும் நாட்டில் தேசிய ஜனநாயகக் கட்சியின் ஆட்சியின் கீழ் மட்டுமே மக்கள் வளர்ச்சி கண்டுள்ளதாக கூறி சிங், அவை முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு, பிரதமர் நரேந்திர மோடி அரசு மூலம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாக கூறிய ராஜ்நாத் சிங், வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயினால் தொடங்கப்பட்டது புதுடில்லியுடன் இணைக்க திரிபுரா சுந்தரா எக்ஸ்பிரஸ் ரயில், ராஜ்தானி எக்ஸ்பிரஸ், அகர்தலாவிலிருந்து கொல்கத்தா வரை டாக்கா வழியாக பஸ் சேவைகள் தொடங்கப்பட்டது என்றார்.  

பிரமர் நரேந்திர மோடி ஆட்சியின் கீழ் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் உருவாகி உள்ளது. நாட்டில் நலன்களுக்கு குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் நலன்களுக்காக பாஜகவை தவிர நாட்டில் வேறு எந்த கட்சியாலும் செய்ய முடியாது என்று கூறினார்.

சமீபத்தில் திரிபுராவில் இரு பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதை குறிப்பிட்டார் ராஜ்நாத் சிங், பாஜக அரசு அமைந்தால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று கூறினார்.

1993-இல் இருந்து இடதுசாரி ஆட்சியில் இருந்து வருகிறது. 1998-இல் இருந்து மணிக் சர்க்கார் முதல்வராக இருந்து வருகிறார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com