5 லட்சம் ரூபாயில் அறிமுகம் மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் மாடல் கார்

மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் மாடல் கார் 5 லட்சம் ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
5 லட்சம் ரூபாயில் அறிமுகம் மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் மாடல் கார்

மாருதி நிறுவனத்தின் புதிய ஸ்விஃப்ட் மாடல் கார் 5 லட்சம் ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் புதிய மாடல்களை சந்தைக்கு கொண்டு வந்து, வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் மாருதி நிறுவனம் இந்த ஆண்டு ஸவிஃப்ட் 2018 புதிய மாடல் காரை  அறிமுகம் செய்துள்ளது. தில்லியில் இதன் குறைந்தபட்ச துவக்க விலை 4.99 லட்சம் ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய ஸ்விஃப்ட் 12 வகைகளில் மற்றும் ஆறு வண்ணங்களில் கிடைக்கிறது. மூன்றாவது தலைமுறை ஸ்விஃப்ட்டிற்கான முன்பதிவுகள் ஜனவரி மாதத்தில் தொடங்கியது. 

தில்லியில் 2018ன் ஆட்டோ எக்ஸ்போ நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட மாருதி சுசுகி நிறுவனம், ‘கான்செப்ட் ஃப்யூச்சர்’ என்ற புதிய மாடலை அறிமுகம் செய்தது.

இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான கெனிச்சி அயுகவா வெளியிட்டார். 

இதையடுத்து பேசிய அவர், இந்திய கார் வாடிக்கையாளர்களுக்கு இம்மாடல் புதிய அனுபவத்தை தரும். புத்தம் புதிய வடிவமைப்பில் அனைவரையும் கவரக்கூடிய அம்சங்கள் நிறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com