பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  330.45 புள்ளிகள் உயர்ந்து
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு

மும்பை:  மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  330.45 புள்ளிகள் உயர்ந்து 34,413.16 புள்ளிகளாக உள்ளன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி  100.15 புள்ளிகள் உயர்ந்து 10,576.85 புள்ளிகளாக இருந்தன.

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிகர இலாபம் மூன்றாம் காலாண்டில் கிட்டத்தட்ட 64% உயர்ந்துள்ளது, எனினும் இது ஆய்வாளர்களின் கருத்துக் கணிப்பைவிட குறைவானது.

மத்திய நிதிக் கொள்கையில், தொடர்ந்து 3-ஆவது முறையாக ரெபோ வட்டி விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஆர்.பி.ஐ. நடுநிலை கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து அரசு பங்கு பத்திரங்களின் விலை 7.530 சதவீதத்தில் இருந்து 7.487தவீதமாக குறைந்தது. 

மேலும் வர்த்தக நேர முடிவில் அமெரிக்க டாலருக்கான ரூபாயின் மதிப்பு சற்று குறைந்து 64.26 ரூபாயாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com