இந்தியாவின் 3 பணக்கார முதல்வர்கள்; 3 ஏழ்மையான முதல்வர்கள் யார் தெரியுமா..? 

இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களில் பணக்கார முதல்வர்கள் யார்..? ஏழ்மையான முதல்வர்கள் யார்..? என்றும் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு 
இந்தியாவின் 3 பணக்கார முதல்வர்கள்; 3 ஏழ்மையான முதல்வர்கள் யார் தெரியுமா..? 

இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களில் பணக்கார முதல்வர்கள் யார்..? ஏழ்மையான முதல்வர்கள் யார்..? என்றும் அவர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற விவரங்களை ஜனநாயக மறுமலர்ச்சி சங்கம் என்ற அமைப்பு நேற்று வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உள்ள 31 முதல்வர்களின் சராசரி சொத்து மதிப்பு 16.18 கோடி. 25 பேர் கோடீஸ்வரர்கள். இதில் இரண்டு பேருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளன. 
 
ஏடிஆர் ஆய்வறிக்கையின் அடிப்படையில், தெலுங்கு தேச கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு ரூ.177 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் பணக்கார வசதியான முதல்வர் என்ற அந்தஸ்தை பிடித்துள்ளார். 

முதல் இடம்: அதிக சொத்து மதிப்புடன் முதலிடம் பெற்றுள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு ரூ.134.8 கோடி அசையும் சொத்தாகவும், ரூ.42.68 கோடி அசையா சொத்தாகவும் இருக்கிறது. 

இரண்டாவது இடம்: அருணாச்சலப்பிரதேச முதல்வர் பீம கந்த் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.129.57 கோடி.

மூன்றாவது இடம்: பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரிந்தர் சிங் மூன்றாவது இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.48.31 கோடி.

நான்காவது இடம்: தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நான்காவது இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.15.15 கோடி. 

ஐந்தாவது இடம்: மேகாலயா முதல்வர் முகுல் சங்மா ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு ரூ.14.50 கோடி

இந்தியாவில் உள்ள 31 மாநில முதல்வர்களில் 25 முதல்வர்கள் ரூ.1 கோடிக்கு மேல் அதிக சொத்து மதிப்பு பெற்றுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.7.80 கோடி சொத்து மதிப்புடன் 12வது இடம் பெற்றுள்ளார். 

ஏழ்மையான முதல்வர்கள்: 
மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த திரிபுரா மாநிலத்தின் முதல்வர் மணிசர்கார் ரூ.26 லட்சம் சொத்து மதிப்புடன் ஏழ்மையான முதல்வர் பட்டியலில் முதலிடம் பெற்றுள்ளார். ஏழை முதல்வர் பட்டியலில் ஐந்து பேர் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி ரூ.55 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களுடன் ஏழ்மையான முதல்வர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். 

இவர்களைத் தொடர்ந்து குறைவான சொத்து மதிப்பு கொண்டவர்களில் 5 பாஜக முதல்வர்கள், 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் ஒரு திரிணாமுல் காங்கிரஸ், மக்கள் ஜனநாயகக் கட்சி, ஜனதா தளம் (ஒற்றுமை) ஆகிய கட்சி முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், முதல் 10 முதல்வர்களில் காங்கிரஸ், தெலுங்கு தேசம் கட்சி, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் மற்றும் சிரியா ஜனநாயக சக்தி சார்ந்த முதல்வர்கள் இடம் பெற்றுள்ளனர். . 

இந்தியாவில் 18 மாநிலங்களில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால், இதில், அதிக சொத்து மதிப்பு கொண்ட முதல்வர்கள் பட்டியலில் ஒரு பாஜக முதல்வர்கள் கூட இடம்பெறவில்லை.

3 பெண் முதல்வர்கள்: நாட்டின் 31 முதல்வர்களில் ராஜஸ்தான் வசுந்தரா ராஜே சிந்தியா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் மஹ்பூபா முஃப்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி என 3 பேர் பெண் முதல்வர்கள்.

இளம் முதல்வர்கள்: இளம் முதல்வர்கள் பட்டியலில் அருணாச்சல பிரதேச முதல்வர் பேமா காண்டு(35). மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்(44), உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்(45) ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

வயதனா முதல்வர்கள்:  வயதனா முதல்வர்கள் பட்டியலில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் (72), கேரள முதல்வர் பினராயி விஜயன்(71) மிஸ்ஸோரம் முதல்வர் லால் தானஹவ்லா (71) ஆகியோர்  இடம் பெற்றுள்ளனர்.

கல்வித்தகுதி: நாட்டின் உள்ள 31 முதல்வர்களிள், 3 முதல்வர்கள் பிளஸ் டூ தேர்ச்சி பெற்றவர்கள், 12 பேர் பட்டதாரிகள், 10 பேர் தொழில்சார்ந்த பட்டதாரிகள், 5 பேர் முதுகலை பட்டதாரிகள், 1 முதல்வர் மட்டும் முனைவர் பட்டம் பெற்றவர் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குற்ற வழக்குகள்: 31 முதல்வர்களில் குற்ற வழக்குகளில் 26 சதவீதம் படுகொலை, கொலை முயற்சி, ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை விநியோகித்தல், பறிமுதல் செய்தல், அச்சுறுத்தல் உள்ளிட்ட குற்றவியல் வழக்குகள் உள்ளன. குற்றவியல் வழக்கு அதிகம் உள்ள முதல்வர்கள் பட்டியலில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 22 குற்ற வழக்குகளுடன் முதல் இடத்திலும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது 3 வழக்குகளும், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் மீது 2 வழக்குகளும், அரியானா முதல்வர் கஹட்டார் மீது 1 வழக்கும் நிலுவையில் உள்ளது.

சட்டப்பேரவை தேர்தலின் போது அளித்த சுயநிர்ணய உரிமை வாக்குமூலங்கள் மூலம் இந்த ஆய்வறிக்கை பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com