நாட்டு மக்களுக்கு உலக வானொலி  தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி 

உலக வானொலி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 
நாட்டு மக்களுக்கு உலக வானொலி  தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி 

உலக வானொலி தினம் இன்று கொண்டாடப்படுகிறது.  இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வானொலி தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

யுனெஸ்கோவின் 36வது பொதுச்சபை கூட்டத்தில் 2011ஆம் ஆண்டு நவம்பர் 3 உலக வானொலி தினமாக அறிவிக்கப்பட்டது. பிறகு 2012ஆம் ஆண்டுமுதல் ஐ.நா.வின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ பிப்ரவரி 13ஆம் தேதியை உலக வானொலி தினமாக அறிவித்தது. அந்தவகையில் இன்று கொண்டாடப்படும் உலக வானொலி தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் 
 

வானொலி துறையில் இணைந்திருக்கும் மக்களுக்கும், அனைத்து பொதுமக்களுக்கும் தனது வானொலி தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் வானொலி என்பது மக்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிக்காது கேளிக்கை துறைக்குள் கொன்டுச் செல்லும் பலம் பெற்ற ஊடகம் எனவும், அதன் மூலம் பெரும் புரட்சியை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களிடன் எளிதில் சென்றடைய இந்த வானொலி பெரும் துணையாக இருப்தினால், பிரதமர் மோடி அவர்கள் தனது அனுபவங்களை மான் கி பாத் நிகழ்ச்சி மூலம் வானொலியில் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தகத்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com