சீனாவின் ஏற்றத்தாழ்வு வர்த்தக கொள்கை: அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவின் ஏற்றத்தாழ்வு வர்த்தக கொள்கையினால் அமெரிக்க தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக
சீனாவின் ஏற்றத்தாழ்வு வர்த்தக கொள்கை: அமெரிக்கா எச்சரிக்கை

சீனாவின் ஏற்றத்தாழ்வு வர்த்தக கொள்கையினால் அமெரிக்க தொழில்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். 

உலகப் பொருளாதாரத்தில் மிக உயர்ந்த இரண்டு நாடுகளான அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும், இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் சீன தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள அமெரிக்க ஸ்டீல் மற்றும் அலுமினிய தொழிற்சாலைகள் மூடப்பட வாய்ப்பு உள்ளதாக சீனாவை எச்சரித்துள்ளார். 

இதுகுறித்து அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் சட்டத் துறையினர் மற்றும் அமைச்சரவையில் விவாதித்த போது தற்போது சீனாவில் உள்ள எஃகு மற்றும் அலுமினிய தொழிற்சாலைகளுக்கு அதிகப்படியான பணம் கொடுக்கப்படுகிறதுறும் அதே நேரத்தில் அந்த தொழிற்சாலைகள் தங்கள் நாட்டிற்கே திரும்பி கொண்டுவரப் பட்டால் அமெரிக்கா கூடுதல் லாபம் ஈட்டும் எனறு கூறினார். 

அமெரிக்க பொருளாதார அமைச்சர் வில்பர் ரோஸ் இதுகுறித்த ஆய்வறிக்கையை இந்த மாதம் சமர்ப்பிக்க உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com