இடதுசாரி கட்சியின் தவறான கொள்கைகளால் திரிபுரா மக்கள்  25 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் மோடி

திரிபுரா மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல், வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில்
இடதுசாரி கட்சியின் தவறான கொள்கைகளால் திரிபுரா மக்கள்  25 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர்: பிரதமர் மோடி

திரிபுரா மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தல், வரும் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமுள்ள 60 தொகுதிகளில் பாஜக 51 தொகுதிகளிலும், அதன் கூட்டணியில் இடம்பெற்றுள்ள திரிபுரா மக்கள் முன்னணி 9 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. 

பாஜக தனது தேர்தல் அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி  திரிபுராவில் உள்ள சாந்திர்பஜாரில் பொதுக்கூட்டத்தில் இன்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் 

காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் இருவரும் தில்லியில் நண்பர்களாக உள்ளனர், ஆனால் திரிபுராவில் ஒரு போரை நடத்துகிறார்கள் என்று மோடி கூறினார். மேலும் 20 ஆண்டுகளில் அதிகாரத்தில் இருந்த இடதுசாரி தலைவர்கள் யாரும் அவர்களை கேள்வி கேட்கமாட்டார்கள். 

திரிபுரா மக்கள் இடதுசாரி கட்சியின் தவறான கொள்கைகளால் 25 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டுள்ளனர். மாநில மக்கள் அவர்களை அதிகாரத்தில் இருந்து அகற்றும்படி நான் கேட்டுக்கொள்கிறேன்.

திரிபுராவில் இடதுசாரி அரசு மக்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிப்படுத்தவோ அல்லது ஏழாம் ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தவோ இல்லை என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com