காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக, பாஜகவுக்கும் அழைப்பு - மு.க. ஸ்டாலின்

தனக்கு பிடித்த முக்கிய தலைவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில்,
காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம்: அதிமுக, பாஜகவுக்கும் அழைப்பு - மு.க. ஸ்டாலின்

சென்னை: காவிரி விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற முறையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

நடிகர் கமல்ஹாசன் வரும் புதன்கிழமை (பிப்.21) அரசியல் கட்சி தொடங்குகிறார். அன்றைய தினமே முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் ராமேஸ்வரம் இல்லத்தில் இருந்து ‘நாளை நமதே’ என்ற தலைப்பில் அரசியல் சுற்றுப் பயணத்தையும் தொடங்குகிறார். 

இந்நிலையில், தனக்கு பிடித்த முக்கிய தலைவர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்து பேசி வருகிறார். இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை கமல்ஹாசன் சந்தித்தார்.

கருணாநிதியை சந்திக்க வந்த கமல்ஹாசனை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வரவேற்று அழைத்து சென்றார்.

இருவரின் சந்திப்புக்கு பின்னர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவிரி விவகாரத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையிலும், திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றார். 

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அதிமுக மற்றும் பாஜகவிற்கும் அழைப்பு விடுக்கப்படும். புதிதாக கட்சி தொடங்கும் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுத்து உள்ளேன். அவரும் காவிரி விவகாரத்தில் திமுக நடத்தவுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தானும் பங்கேற்பதாக தெரிவித்து உள்ளார் என கூறிய ஸ்டாலின் புதிய கட்சி தொடங்கவுள்ள கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்தேன் என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com