டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய
டி20 கிரிக்கெட் போட்டி: இந்தியா 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி

ஜோஹன்னஸ்பர்க்: இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, 6 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை 5-1 என்ற கணக்கில் வென்றது.  இது, தென் ஆப்பிரிக்க மண்ணில் இந்தியா வென்ற வரலாற்று வெற்றி  என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்து இந்தியா-தென்ஆப்பிரிக்கா இடையே மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில், இதன் முதல் டி20 தொடரின் முதலாவது ஆட்டம் ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ் ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.

முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்துள்ளது. கோலி 26 ரன்களும், பாண்டியா 7 பந்தில் 13 ரன்னும், மணீஷ் பாண்டே 27 பந்தில் 29 ரன்களும் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் இருந்தனர். 

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன் மட்டுமே எடுத்து 28 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

தென் ஆப்பிரிக்கா அணியில் ஹெண்டிக்ஸ் 70 ரன்களும், பெஹார்டியன் 39 ரன்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய புவனேஷ்குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com