ரூ.11,500 கோடி மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சீல் வைப்பு

இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் கொள்ளை விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்கவுதற்குள் பஞ்சாப் நேஷனல்
ரூ.11,500 கோடி மோசடி: பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சீல் வைப்பு

மும்பை எம்சிகே பிராடி ஹவுள் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளைக்கு சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

இந்திய வங்கித் துறையில் விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் கொள்ளை விவகாரம் ஏற்படுத்திய அதிர்ச்சி அடங்கவுதற்குள் பஞ்சாப் நேஷனல் வங்கி யில் கீதாஞ்சலி குழுமம் தலைவர் வைரத் தொழிலதிபர் நீரவ் மோடியின் கொள்ளை பற்றிக்கொண்டு எரிகிறது. 

மும்பையைச் சேர்ந்த அந்த வங்கியின் ஒரு கிளை அளித்த வங்கி உத்தரவாதத்தின் அடிப்படையில், வைரத் தொழிலதிபர் நீரவ் மோடியின் கீதாஞ்சலி குழுமம் தொடர்புடைய நிறுவனங்களுக்காக, வெளிநாடுகளிலுள்ள இந்திய பொதுத் துறை வங்கிகள் தாராளமாக வாரி வழங்கியிருக்கின்றன.

ரூ.11,300 கோடிக்கும் மேல் வழங்கப்பட்டுள்ள இந்தக் கடன்களுக்கு உத்தரவாதம் அளித்துள்ளதால், அந்தக் கடன்களை திருப்பித் தருவதற்கான பொறுப்பு பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலையில் விழுந்துள்ளது.  

இதற்கான உத்தரவாதக் கடிதங்களை, வங்கிக் கிளையில் பணி புரிந்த இரு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக் கொண்டு அளித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. கிளைக்குப் புதிதாக வந்த அதிகாரி ஒருவர் அந்தக் கடிதங்களைப் பார்த்து அதிர்ச்சியடைந்து நிர்வாகத்துக்கு தகவல் தந்ததாகவும், பதறிப் போன வங்கி நிர்வாகம் மத்திய புலனாய்வு அமைப்பிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும், சொல்லி வைத்தது போல அந்தப் புகார் மனு சிபிஐ-யின் கைகளுக்குச் சேர்வதற்கு முன்னரே தொழிலதிபர் நீரவ் மோடி தனது குடும்பத்தினருடன் இந்தியாவைவிட்டு மிக பத்திரமாக தப்பிச் சென்றார். ஆளில்லாத கடையில் ஆற்றும் டீயாக, அவர் நாட்டைவிட்டே போன பிறகு இந்த முறைகேடு குறித்து புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், “பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடைபெற்ற ஊழல் குறித்து பிரதமரும், நிதித்துறை அமைச்சரும் மௌனம் காப்பது ஏன்? பஞ்சாப் நேஷனல் வங்கியில் இந்த மிகப்பெரிய ஊழல் எப்படி நடைபெற்றது? இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறும் வரை ரிசர்வ் வங்கி என்ன செய்தது? நிதித்துறை என்ன செய்தது? இந்த முறைகேடு குறித்து உடனே சி.பி.ஐ விசாரணையைத் தீவிரப்படுத்த வேண்டும் என எதிர்கட்சிகள் கூச்சல் ஈட்டு வருகின்றன. 

இந்நிலையில், வைரத் தொழிலதிபரின் உத்தரவாத கடிதங்களின் அடிப்படையில், உத்தரவாதம் அளித்த மும்பை எம்சிகே பிராடி ஹவுள் பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையை சிபிஐ அதிகாரிகள் இன்று சீல் வைத்துள்ளனர். ரூ.11,500 கோடி மோசடி செய்த நீரவ் மோடிக்கு இந்த கிளையில் இருந்தே உத்தரவாதம் தரப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com