பி.எப் வட்டி 8.50 சதவீதமாக குறைப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 8.65
பி.எப் வட்டி 8.50 சதவீதமாக குறைப்பு

வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி 0.15 விகிதமாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 8.65 சதவீதமாக இருந்த பி.எப் வட்டி 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

சந்தாதாரர்களுக்கான வட்டி விகிதத்தில் EPFO முடிவு செய்தபின், அது நிதி அமைச்சகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும். பின்னர் ஆண்டுக்கான வட்டி நிதி ஆண்டின் இறுதியில் சந்தாதாரர்களின் கணக்குகளுக்கு வரவு வைக்கப்படும். பத்துலட்சம் கோடி ரூபாய் வைப்பு நிதியில் சுமார் ஒரு கோடி ரூபாய் மாதம் தோறும் சந்தாதாரர்களுக்கு ஒப்படைக்கப்படுகிறது. 

ஒரு EPFO சந்தாதாரர் ஆன்லைனில் அல்லது அவரின் கணக்கில் ஆன்லைனில் இருப்புகளை சரிபார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மும்பை பங்குச் சந்தையில் ஈ.பி.எஃப்.ஓ.,  முதலீடுகளின் ஒருபகுதி இந்த மாத தொடக்கத்தில் விற்கப்பட்டது. இதில் ரூ.2,886 கோடி  கிடைத்துள்ளதாக பிடி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மாதத்தில் ஓய்வூதிய நிதியில் ரூ. 1,054 கோடி மதிப்பிலான பங்குகள் விற்பனை செய்யப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2015 முதல் EPFO நிதிகள் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com