பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி சரிவு

மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  25.36 புள்ளிகள் குறைந்து,
பங்குச் சந்தை: வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் - நிஃப்டி சரிவு

மும்பை பங்குச்சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  25.36 புள்ளிகள் குறைந்து, 33,819.50 புள்ளிகளாக உள்ளன. அதேபோல், தேசியப் பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 14.75  புள்ளிகள் குறைந்து, 10,382.70 புள்ளிகளாக இருந்தன. 

எண்ணெய் மற்றும் எரிவாயு, உலோகம், ஆட்டோ, பி.எஸ்.யூ மற்றும் வங்கிகள் போன்ற முன்னணி நிறுவன பங்குகள் விலை 0.99% வரை குறைந்திருந்தது. ஓஎன்ஜிசி, ஏஷியன் பெயின்ட்ஸ், டாக்டர் ரெட்டிஸ், டாடா மோட்டார்ஸ், ஆக்சிஸ் வங்கி, மாருதி சுசூகி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, நிலக்கரி இந்தியா மற்றும் M & எம் போன்ற நிறுவன பங்குகள் விலை 1.82% வரை சரிந்திருந்தது.

அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் இன்றைய மதிப்பு
ரூ. 65.07 ஆக இருந்தது. அதேபோல் பிற நாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு பின்வருமாறு: -
ஒரு ஐரோப்பிய யூனியன் யூரோ = ரூ. 79.84
ஒரு பிரிட்டன் பவுண்ட் ஸ்டெர்லிங் = ரூ. 90.37
ஆஸ்திரேலியா (டாலர்)  =  ரூ. 50.80
கனடா (டாலர்)  =  ரூ. 51.26
சிங்கப்பூர் (டாலர்)  =  ரூ. 49.10
ஸ்வீஸ் ஃப்ராங்  = ரூ. 69.24
மலேசிய ரிங்கெட்  =  ரூ. 16.60
நூறு ஜப்பானிய யென் = ரூ. 60.54
சீன யுவான் ரென்மின்பி = ரூ. 10.23
பஹ்ரைன் தினார் =   ரூ. 173.06
ஹாங்காங் (டாலர்) =   ரூ. 8.31
குவைத் தினார் =   ரூ. 216.69

கடந்த வர்த்தகத்தில் அமெரிக்க டவ் ஜோன்ஸ் தொழிற்துறை சராசரியாக 0.67% வரை குறைந்து முடிந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com