எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை: ரஜினிகாந்த் பேட்டி

கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். பாதைகள் தான் வேறு; சென்று சேரும் இடம் ஒன்று தான்
எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை: ரஜினிகாந்த் பேட்டி

சென்னை: அரசியலில் கட்டமைப்பு முக்கியம் என்பதால் கட்சி அமைப்பதற்கு இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

தனது அரசியல் பயணம் குறித்து கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி வெளியிட்ட ரஜினி காந்த 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்தார். முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் தினசரி அரசியல் குறித்து பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார். 

இந்நிலையில், இன்று நெல்லை மாவட்ட ரசிகர்மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறிகையில், கட்சி தொடங்கியுள்ள கமலுக்கு ஏற்கனவே வாழ்த்து தெரிவித்துள்ளேன். பாதைகள் தான் வேறு; சென்று சேரும் இடம் ஒன்று தான் என தெரிவித்தார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டியிருப்பது வரவேற்க்கத்தக்கது. 

தலைவனாக நான் சரியாக இருக்கிறேன். கட்சி கட்டமைப்புதான் அரசியலுக்கு முக்கியம். தோல்வியடைந்தாலும், கட்சி கட்டமைப்புதான் கட்சியை காப்பாற்றும் என தெரிவித்தார்.

ரசிகர்கள் அனைவரையும் சந்திக்க சில நாட்கள் ஆகும். கட்சி பொறுப்பாளர்களைத் தேர்வு செய்த பின்னர் சுற்றுப் பயணம் குறித்த தகவல் வெளியிடப்படும். 

நமது மக்கள் இயக்கம் 32 ஆண்டுகால கட்டமைப்பு கொண்டுள்ளது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளை நியமித்த பின் கட்சி தொடங்க நடவடிக்கை என்றவர் எனது ரசிகர்களுக்கு அரசியல் பாடம் யாரும் கற்றுத்தர தேவையில்லை என தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com