கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி
கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

புதுதில்லி: விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று, ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பெண்களின் பங்களிப்பை உறுதி செய்வது இந்தியரான நமது அனைவரின் கடமையாகும். புதிய இந்தியாவை உருவாக்குவதிலும், வளர்ச்சியிலும் சரிநிகர் சமமானவர்கள் பெண்கள். அவர்களுக்கு வலிமையும், சக்தியும் கிடைக்க வேண்டும்.

மார்ச் 8-ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. முக்கியத்துவம், உரிமைகள் பெண்களுக்கு அளிப்பதே, உண்மையான சுதந்திரம் என்று பெண்கள் குறித்து சுவாமி விவேகானந்தர் கூறி இருக்கிறார். இந்த பாரம்பரிய சமூகத்தில் பெண்களால்தான் ஆண்கள் அடையாளம் காணப்படுகிறார்கள்.

யசோதா நந்தன், கவுசல்யா நந்தன், காந்தாரி புத்ரா ஆகியவை பெண்களை வைத்தே அவர்கள் மகன் அடையாளம் காணப்பட்டார்கள். பெண்களின் முன்னேற்றமே இந்தியாவை நகர்த்தி கொண்டு செல்லும் என்றார். 

பாஸ்கரா, பிரம்மகுப்தா, ஆர்யபட்டா போன்ற மிகச்சிறந்த கணிதவியலாளர்களையும், ஜக்தீஷ் சந்திர போஸ், சத்யேந்திரநாத் போஸ் போன்ற மிகச்சிறந்த அறிவியலாளர்களையும் பெற்ற நாடு இந்தியா என்றவர் அறிவியல் துறைக்கு இந்தியா ஆற்றி வரும் பங்கு குறித்து பேசினார்.

வரும் 28-ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது. விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் ஏழை மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்க வேண்டும். ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் பின்னால், ஒரு ஆக்க சக்தி இருக்க இருக்க வேண்டும்.

மனித இனத்தின் நலனுக்கு தொழில்நுட்பம் உதவ வேண்டும் என்று தெரிவித்த பிரதமர், செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளின் வாழ்வை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அறிவியலாளர்களை கேட்டுக் கொண்டார். 

பேரழிவுகளை தவிர்த்து மற்ற அனைத்து விபத்துகளும் நமது தவறுகளால் தான் நடக்கின்றன என்று தெரிவித்த மோடி, விதிகளை பின்பற்றி எச்சரிக்கையுடன் நடந்து கொண்டால் விபத்துகளை தடுக்கலாம் என்றவர் மார்ச் 4-ஆம் தேதி தேசிய பாதுகாப்பு நாள் வருகிறது, நாட்டு மக்கள் அனைவரும் பாதுகாப்பு விஷயங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும். நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பாதுகாப்பு நடைமுறைகளை முறையாக கடைபிடிக்காவிட்டால், நாம் குறிப்பிட்ட உயரத்தை அடைய முடியாது. ஆதலால், அன்றாட பாதுகாப்பு விஷயங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

70 ஆண்டுகள் இருளில் இருந்த எலிபண்டா தீவுகளில் உள்ள மூன்று கிராமங்கள் இறுதியாக மின்சார இணைப்புகளை பெற்றுள்ளதாக தெரிவித்த மோடி, அதனை சாத்தியமாக்கிய நிர்வாகத்தினருக்கும், மக்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பசுமை எரிசக்தி மற்றும் அதுசார்ந்த பணிகளில் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த மோடி, கழிவுகளை கிராம நலனுக்கானதாக மாற்றுங்கள். மத்திய அரசு புதிதாக தொடங்கிய கோபர் தன் திட்டத்தின் மூலம் கிராணங்களில் பசுவின் சாணம், விவசாயக் கழிவுகள் மூலம் பயோ கியாஸ் உருவாக்கப்பட்டு வருகிறது. ஸ்வச் பாரத் திட்டத்தின் மூலம் செயல்படுத்தும் திட்டத்தின் மூலம் சுத்தமான சக்தி கிடைக்கும் என்றவர் வரும் ஹாலி பண்டிகைக்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் மோடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com