நாடு முழுவதும் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் 

புதுதில்லி: மருத்துவ கல்வியை நிர்வகிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப்  பதிலாக ‘தேசிய
நாடு முழுவதும் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் வாபஸ் 

புதுதில்லி: மருத்துவ கல்வியை நிர்வகிப்பதற்காக இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப்  பதிலாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்துவிட்டு, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பது தொடர்பான சட்ட மசோதாவை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

தேசிய மருத்துவ ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும். 4 தன்னாட்சி அமைப்புகளின் உறுப்பினர்களை மந்திரிசபை செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும். தேர்வுக்குழுவில், தேர்ந்தெடுக்கப்பட்ட 5 உறுப்பினர்களும், அலுவல்நிலை உறுப்பினர்கள் 12 பேரும் இடம்பெறுவார்கள் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்கும் மசோதாவே சட்டவிரோதமாக இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

கேரளாவில் தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு எதிரான மருத்துவர்களின் போராட்டம் நடத்திவந்தனர்.  அதேபோல் தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மசோதா அனுப்பப்பட்டதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com