100வது செயற்கைக்கோளான கார்டோசாட் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு பரிசு : இஸ்ரோ தலைவர் பேச்சு

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி
100வது செயற்கைக்கோளான கார்டோசாட் நாட்டு மக்களுக்கான புத்தாண்டு பரிசு : இஸ்ரோ தலைவர் பேச்சு

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை 9.28 மணிக்கு பிஎஸ்எல்வி சி-40 ராக்கெட் விண்ணில் ஏவியது இஸ்ரோ.

இந்தியா சார்பில் 710 கிலோ எடை கொண்ட கார்டோசாட்-2 செயற்கைக்கோள், 100 கிலோ எடை கொண்ட மைக்ரோ சாட்டிலைட் மற்றும் 5 கிலோ எடை கொண்ட மிகச் சிறிய நானோ செயற்கைக் கோள்களையும் இஸ்ரோ இன்று வெள்ளிக்கிழமை காலை காலை 9.28 மணிக்கு தனது 100வது செயற்கைகோளை விண்ணுக்கு ஏவியது.

இஸ்ரோ தயாரித்துள்ள 100வது செயற்கைக்கோளான இந்தியாவின் கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள்களுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 30 மைக்ரோ மற்றும் நானோ செயற்கைக்கோள்களை முதலாவது ஏவுதளத்தில் இருந்து சுமந்துகொண்டு பிஎஸ்எல்வி சி40 ராக்கெட் விண்ணுக்கு சென்றது.

இந்நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் பேசிய அதன் தலைவர் கிரண்குமார், கார்டோசாட் செயற்கைகோள் நாட்டு மக்களுக்கு புத்தாண்டுக்கான பரிசு என்றார். செயற்கைகோள் திருப்திகரமாக செயல்படுவதாக குறிப்பிட்டார்.

கார்டோசாட் 2 வரிசை செயற்கைக்கோள் எல்லைப் பகுதியைக் கண்காணிப்பதற்கும் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்துவதற்கு தேவையான துல்லியமான தகவல்கள், அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில் டாங்குகள் உள்ளிட்டவற்றின் நடமாட்டம் போன்ற தகவல்களை அறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com