கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறப்பு

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் கடந்த 4-ஆம் தேதி முதல் 8 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவைத் தொடர்ந்து, வேலை நிறுத்தத்தை வாபஸ் பெறுவது குறித்து எத்தகைய முடிவினை எடுப்பது என்பது குறித்து தொமுச, சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி., உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் நேற்று வியாழக்கிழமை இரவு சுமார் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். வேலை நிறுத்தத்தை தாற்காலிகமாக வாபஸ் பெறுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை முதல் தொழிலாளர்கள் பணிக்குச் செல்வார்கள் எனவும், கடந்த 8 நாள்களாக நிலவி வந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாகவும் இரவு 10 மணியளவில் பணியாளர்கள் கருத்துத் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இன்று அதிகாலை முதல் பணிக்கு திரும்பியதை அடுத்து வழக்கம் போல் இயங்க துவங்கியது. 

பொங்கல் பண்டிகைக்காக பள்ளிகள் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மக்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்வதற்கு புறப்பட்டுள்ளனர். தற்போது சென்னையில் கடும் மக்கள் நெரிசலும் ஏற்பட்டுள்ளது. 

வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்டம் அதிகமாக உள்ளதால் கோயம்பேட்டில் பேருந்து சிறப்பு முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இங்கு மக்கள் தங்கள் பயணத்திற்கான பேருந்துகளை எளிதாக புக் செய்து கொள்ள முடியும். போக்குவரத்து தொழிலாளர்களின் 8 நாட்கள் போராட்டத்தால் திறக்கப்படாமல் இருந்த சிறப்பு முன்பதிவு மையம் இன்று திறக்கப்பட்டு இருப்பதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. ஏற்கனேவே, காலதாமதம் காரணமாக பொங்கல் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மற்ற சாதாரண பேரூந்துகளில் முன்பதிவு செய்யப்படும் என்று கூறப்பட்டு உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com