முதியோர் இல்லத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் 

இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை தேர்தல் முறையில் கொண்டு வந்த டி.என்.சேஷன்.
முதியோர் இல்லத்தில் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் 

இந்திய தேர்தல் தலைமை ஆணையராகப் பணியாற்றி முக்கிய சீர்திருத்தங்களை தேர்தல் முறையில் கொண்டு வந்த டி.என்.சேஷன். சென்னையில் உள்ள முதியோர் இல்லத்தில் தமது மனைவியுடன் வசித்து வருகிறார். 

டி.என். சேஷன் (திருநெல்லை நாராயண அய்யர் சேஷன்) இந்திய ஆட்சிப் பணி அலுவலராக இந்திய அரசின் பல்வேறு அரசுப் பொறுப்புக்களை வகித்து ஓய்வு பெற்றவர். இந்தியாவின் 10வது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக 1990 முதல் 1996 வரை பொறுப்பேற்றவர். தலைமை தேர்தல் ஆணையராக இருந்தபோது எடுத்த அதிரடி நடவடிக்கைகள் பல. இவரது சில நடவடிக்கைகள் பலத்த விமர்சனத்துக்கு உள்ளானபோதிலும் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு சீர்திருத்தங்களை செய்தது, தேர்தல் தில்லுமுல்லுகளை கட்டுப்படுத்த எடுத்த முனைப்பான நடவடிக்கைகளால் பெரிதும் அறியப்பட்டவர்.

தேர்தல் ஆணையத்தின் மீது சாதாரண பொதுமக்களின் கவனத்தையும் திரும்ப வைத்த பெருமைக்குரியவர் டி.என்.சேஷன். அரசியல்வாதிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர். மிகக் கடுமையாக தேர்தல் ஆணைய விதிகளை அமல்படுத்தி அரசியல்வாதிகளுக்கு எதிரியானார். 

இவர் தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து 1999-இல் ஓய்வு பெற்ற பின்னர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

பாலக்காட்டை சேர்ந்தவரான சேஷனுக்கு சொந்த ஊரில் வீடு இருந்தாலும், வயோதிக காலத்தில் கவனித்துக் கொள்ள பிள்ளைகள் இல்லாததாலும், தன் வயதையொத்தவர்களுடன் சேர்ந்து வாழ் விரும்பியே முதியோர் இல்லத்தை நாடிச் சென்றதாக கூறப்படுகிறது. 

அண்மையில் குருகுலம் முதியோர் இல்லத்தில் சேஷன் தமது 85 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

கோவை, திண்டுக்கல் மாவட்டங்களில் உதவி ஆட்சியர், மதுரை மாவட்ட ஆட்சியர், போக்குவரத்து துறை இயக்குநர், வேளாண், தொழில்துறைச் செயலர், என தமிழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com