சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் போகியன்று நிலவிய கற்றுத்தர அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. 
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் போகியன்று நிலவிய கற்றுத்தர அறிக்கையை மாசுகட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டது. 

தமிழகத்தில் மார்கழி மாதத்தின் இறுதி நாளான இன்று போகி பண்டிகையை தமிழகம்  முழுவதும் மக்கள் கொண்டாடி வருகின்றனர். அதிகாலையில் பழைய  பொருட்களை ஆங்காங்கே சேகரித்து எரித்தனர். இதனால், எழும் கடும்  புகையானது காற்றை மாசுபடுத்தி வருகிறது. 

இதையடுத்து, காற்றின் தரத்தினை ஆராய்ந்து தமிழக மாசுகட்டுபட்டு வாரியம் அறிக்கை  வெளியிட்டது. இந்த ஆய்வின்படி கந்தக டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு ஆகிய வாயுக்களின் அளவு போகிக்கு முந்தைய இரு நாட்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவைவிடக் குறைவாக இருந்ததும் போகி அன்று அதிகமாக இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் 15 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வில்,  ராசாயன வாயுக்களின் அளவு அனுமதிக்கப்பட்டதைவிட குறைவாகவே இருந்தது. அதிக ஈரப்பதம், குறைந்த வெப்பநிலை, குறைவான காற்றின் வேகம் ஆகியவற்றால் நுண் துகள்கள் பரவாமல் நிலை கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com