
மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் துவங்கின
By DIN | Published on : 14th January 2018 10:08 AM | அ+அ அ- |

மழையூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப் பாய்ந்த காளையை அடக்க முயலும் வீரர்கள்.
பொங்கல் விழாவை முன்னிட்டு இன்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ்,காவல் துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ போஸ், விருதுநகர் எம்.பி ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு தொடங்கி 1 மணி நேரத்தில் 83 காளைகள் களத்தில் விளையாடி உள்ளன.
2 ஆண்டுகளுக்கு பிறகு ஜல்லிக்கட்டு நடப்பதால், இதனை காண ஏராளமானோர் ஆர்வத்துடன் வந்து குவிந்து உள்ளனர். அவர்கள் விசில் அடித்தும் பலத்த கரகோஷம் எழுப்பியும், வீரர்களை உற்சாகப்படுத்திக் கொண்டே உள்ளனர்.
பார்வையாளர்களுக்காக இரண்டு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காளைகளுக்கும் வீரர்களுக்கும் அடிபடாமல் இருப்பதற்காக தேங்காய் நார்கள் போடப்பட்டுள்ளது.