மூத்த நீதிபதிகளுடன் அனுசரித்து செல்லுங்கள்: தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை போர்க்கொடி
மூத்த நீதிபதிகளுடன் அனுசரித்து செல்லுங்கள்: தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் கடிதம்

புதுதில்லி: புதிய விதிமுறை வகுக்கும் வரை, மூத்த நீதிபதிகளுடன் அனுசரித்து செல்லுமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்ட நீதிபதிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தின் 4 மூத்த நீதிபதிகள் திடீரென்று கடந்த வெள்ளிக்கிழமை போர்க்கொடி உயர்த்தினர். உச்சநீதிமன்ற நிர்வாகம் சரியில்லை என்றும், வழக்குகளை ஒதுக்குவதில் ஜனநாயக நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னிச்சையாகச் செயல்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.

இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு பிரதமர் மோடியின் முதன்மைச் செயலர் நிருபேந்திர மிஸ்ரா காரில் செல்லும் காட்சி தொலைக்காட்சிகளில் சனிக்கிழமை ஒளிபரப்பானது. ஆனால், தீபக் மிஸ்ராவின் வீட்டு வாசல் கேட் திறக்கப்படவில்லை. வீட்டுக்கு வெளியே சிறிது நேரம் நின்ற அந்தக் கார் பின்னர் திரும்பிச் சென்றுவிட்டது.
இந்தக் காட்சி ஒளிபரப்பான பிறகு, தீபக் மிஸ்ராவின் இல்லத்துக்கு சிறப்புத் தூதுவரை (நிருபேந்திர மிஸ்ரா) பிரதமர் அனுப்பி வைத்தது ஏன்? இதற்கு பிரதமர் மோடி பதில் சொல்லியாக வேண்டும் என்று பிரதமர் பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இந்நிலையில், முன்னாள் நீதிபதிகள் சாவந்த், சந்துரு, ஏ.பி.ஷா, சுரேஷ் உள்ளிட்டோர் தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

அந்த கடிதத்தில், புதிய விதிமுறைகள் வகுக்கும் வரை, மூத்த நீதிபதிகளுக்கு முக்கிய வழக்குகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் ஒருசில நீதிபதிகளுக்கு மட்டும் முக்கிய வழக்குகளை ஒப்படைக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com