ஆப்கானில் இந்திய தூதரகம் மீது குண்டு வீச்சு

உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்திய நாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 
ஆப்கானில் இந்திய தூதரகம் மீது குண்டு வீச்சு

காபூல்: உளவுத்துறை எச்சரித்திருந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இந்திய நாட்டு தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் அமைந்துள்ள வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் ராக்கெட் குண்டு விழுந்துள்ளது. இந்திய தூதரகத்தின் மிக அருகே உள்ள வேலியில் இந்த குண்டு விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இந்த தாக்குதல் குறித்து வெளியுறவு செய்தி தொடர்பாளர் ராவீஷ் குமார் டுவிட்டர் பதிவில், தூதரக கட்டிடத்தில் சேதங்கள் இல்லை ராக்கெட் குண்டு வீசப்பட்டதா என்பதும் உறுதியாக தெரியவில்லை என பதிவிட்டுள்ளார். 

மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்திய தூதரகம் மீது ராக்கெட் குண்டு வீசப்பட்டுள்ளதாகவும், இந்த தாக்குதலால் இந்திய ஊழியர்கள் யாருக்கும் பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் 3 பேர் தில்லியில் பதுங்கியிருப்பதாகவும், ஜனவரி 26-ஆம் தேதி குடியரசு தினத்தன்று அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை ஓரிரு தினங்களுக்கு முன்பு தான் எச்சரித்திருந்தது. அதற்குள் இந்த தாக்குதல் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com