உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரச்சினை தீரவில்லை: அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தகவல்!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீர வேண்டும் என்றே விரும்புவதாகவும் 3 நாட்களில் இந்த
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரச்சினை தீரவில்லை: அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தகவல்!

புதுதில்லி: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, மூத்த நீதிபதிகள் இடையேயான பிரச்சினை தீர வேண்டும் என்றே விரும்புவதாகவும் 3 நாட்களில் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்றும் மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் கூறியுள்ளார். 

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் அவர்களுக்குள்ளேயே பேசி பிரச்சனையைத் தீர்த்துக் கொண்டதாகவும், நீதிபதிகளின் அதிருப்தியை, யாரும் அரசியலாக்க விரும்பவில்லை. உச்சநீதிமன்ற நிர்வாகம் வெளிப்படையாகவே நடைபெறுகிறது என இந்திய பார்கவுன்சில் சங்கத் தலைவர் மனன்குமார் மிஸ்ரா நேற்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் பிரச்சினை இன்னும் தீரவில்லை என்று கூறியுள்ளார். 

நீதிபதிகள் பிரச்னை குறித்து கருத்து தெரிவித்த அட்டர்னி ஜெனரல் வேணுகோபால், தலைமை நீதிபதி மீது மூத்த நீதிபதிகள் 4 பேரின் குற்றச்சாட்டு மிக முக்கியமானது. இந்த பிரச்சினை விரைவில் தீர வேண்டும் என்றே நான் நம்புகிறேன்.

தற்போதைய சூழலில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. விரைவில் முழுவதும் தீர்வு காணப்படும். தலைமை நீதிபதியை சந்தித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, தான் யாரையும் சந்திக்கவில்லை என்று கூறினார். 

மேலும் உச்ச நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து குறைகூரிய நான்கு மூத்த நீதிபதிகளான செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசஃப் ஆகியோர் தங்களது பணிக்குத் திரும்பியுள்ளதாவும், அவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (ஜன.12) செய்தியாளர்களை சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் என வேணுகோபால் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com