பிப்ரவரி 24-இல் அதிமுகவின் "நமது அம்மா" நாளிதழ் வெளிவருகிறது

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அதிமுகவின் அதிகாரப்பூர்வ "நமது அம்மா" நாளிதழ் வெளியாக உள்ளது.
பிப்ரவரி 24-இல் அதிமுகவின் "நமது அம்மா" நாளிதழ் வெளிவருகிறது

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அதிமுகவின் அதிகாரப்பூர்வ "நமது அம்மா" நாளிதழ் வெளியாக உள்ளது.

கடந்த 3-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, அதிமுகவுக்கு பிரத்யேகமாக தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள் விரைவில் தொடங்கப்படும் என தெரிவித்திருந்தார். மேலும் அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதிமுக சார்பில் தொடங்கப்பட உள்ள நாளிதழுக்கு "நமது அம்மா" என பெயர் வைக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி அன்று அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடாக "நமது அம்மா" நாளிதழ் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழ் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அதிமுகவுக்காக பிரத்யேகமான இருந்த "நமது எம்.ஜி.ஆர்" நாளிதழ் தற்போது டிடிவி தினகரனுக்கு ஆதரவாக உள்ள நிலையில், இந்த புதிய நாளிதழ் வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com