ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி டிச.27ஆம் தேதியுடன் நிறைவு: நிர்மலா சீதாராமன்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் காணாமல் போன மீனவர்களை மீட்க விரிவான
ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி டிச.27ஆம் தேதியுடன் நிறைவு: நிர்மலா சீதாராமன்

ஒக்கி புயலால் பாதிக்கப்பட்ட தமிழகம், கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் காணாமல் போன மீனவர்களை மீட்க விரிவான தேடுதல் பணி நடந்தது. கடலோர காவல்படை மற்றும் கடற்படையினரின் தீவிர தேடுதல் பணியின் மூலம் தமிழகத்தைச் சேர்ந்த 453 மீனவர்களும், கேரளாவைச் சேர்ந்த 352 மீனவர்களும், லட்சத்தீவைச் சேர்ந்த 30 மீனவர்களும் மீட்கப்பட்டனர்.

சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மீனவளத்துறை தந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 15-ம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 400 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த 261 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். அதில், டிசம்பர் 20ம் தேதி வரையிலான காலகட்டத்தில் 453 தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் ஒக்கி புயலால் காணாமல் போன மீனவர்களை தேடும் பணி டிச.27ஆம் தேதியுடன் நிறைவு பெற்றதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மேலும் அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசும் போது கடுமையான முயற்சிகளை மேற்கொண்டும் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com