பங்குச் சந்தை: புதிய உச்சத்தினை தொட்டது சென்செக்ஸ்

மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  178.47 புள்ளிகள் உயர்ந்து,
பங்குச் சந்தை: புதிய உச்சத்தினை தொட்டது சென்செக்ஸ்

மும்பை, மும்பை பங்குச் சந்தையில் இன்று மாலை வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் குறியீட்டு எண்  178.47 புள்ளிகள் உயர்ந்து, 35,260.29,புள்ளிகளாக இருந்தன. அதேபோல் தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி 28.45 புள்ளிகள் உயர்ந்து, 10,817. புள்ளிகளாக உள்ளன. 

இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் உயர்ந்து 35,500 என்ற உச்சத்தினை தொட்டது. இதேபோன்று தேசியப் பங்குச் சந்தை நிஃப்டி குறியீடும் 10,887 என்ற உச்ச அளவை எட்டியுள்ளது.  அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பும் 63.84 என்ற அளவில் உயர்ந்துள்ளது. 

கார்ப்பரேட் நிறுவன வருவாயில் வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றால் இந்த வருடம் பங்கு சந்தை புதிய உச்சத்தினை அடைந்துள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஐடிசி, எச்டிஎஃப்சி வங்கி, எச்.டி.எஃப்.சி. மற்றும் எம்.எம். ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் உயர்ந்த நிலையில் அதானி போர்ட்டுகள், டாடா ஸ்டீல், கோல் இந்தியா மற்றும் சன் பார்மா ஆகியவற்றின் பங்குகள் இழப்புகளை சந்தித்தன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com