ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது

ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான், மேற்கு வங்கத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடங்கியது

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான், மேற்கு வங்க மாநிலத்தில் 3 மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் அல்வார், அஜ்மீர், மேற்கு வங்கத்தில் உலுபெரியா மக்களவைத் தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் 2 சட்டப்பேரைவ தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

அல்வார் மக்களவை தொகுதியில் மொத்தம் 1,987 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அஜ்மீர் மக்களவை தொகுதியில் 1,925 வாக்குச்சாவடிகள் வாக்காளர்களுக்கு வாக்களிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் வாக்காளர்களுக்கு 282 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அல்வார் தொகுதியில் 18.27 லட்சம் வாக்காளர்களும், ஆஜ்மீர் தொகுதியில் 18.42 லட்சம் வாக்காளர்களும், மண்டல்கர் சட்டப்பேரவை தொகுதியில் 2.31 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆவர்.

அல்வார் தொகுதியில் 11 பேரும், அஜ்மீர் மற்றும் மண்டல்கரில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com