அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் சுட்டுக்கொலை: வீடியோ வெளியிட்டு அமெரிக்க போலீஸ் விசாரணை

தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபரின் வீடியோவை
அமெரிக்காவில் தெலங்கானா மாணவர் சுட்டுக்கொலை: வீடியோ வெளியிட்டு அமெரிக்க போலீஸ் விசாரணை

 ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர், அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், சந்தேக நபரின் வீடியோவை வெளியிட்டுள்ள அமெரிக்க போலீஸார், தகவல் தெரிவித்தால் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநிலம், வாராங்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சரத் கோபு(26), அமெரிக்காவின் கான்சாஸ் நகரில் உள்ள மிசெளரி பல்கலைகழகத்தில் கணின் மென்பொருள் என்ஜினியரிங் பட்ட மேற்படிப்பு பயின்று வருவதுடன், அங்குள்ள ஒரு உணவு விடுதியில் பகுதிநேர பணியாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். சரத் கோபுவின் தந்தை ராம் மோகன், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு உணவு விடுதிக்கு வந்த ஒருவன், வாடிக்கையாளர் ஒருவரின் பணத்தை பறித்துக் கொண்டு ஓடியபோது, அதை சரத்கோபு தடுக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சரத்கோபு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

சுட்டது யார் என்பது குறித்தும், அதற்கு காரணம் குறித்த தகவல் வெளியாகவில்லை. பலியான மாணவர் உடலை இந்தியா கொண்டு வர தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி.ராமாராவ் மத்திய அரசிடம் வலியுறுத்தி வருகிறார்.

இதனிடையே அமைச்சர் கே.டி.ராமாராவ், ஸ்ரீஹரி மற்றும் டி. ஸ்ரீனிவாச யாதவ் ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத்தில் உள்ள சரத்கோபுவின் வீட்டிற்கு சென்று குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர். 

பின்னர் இரண்டு நாட்களுக்குள் சரத்கோபு உடலை ஹைதராபாத்துக்கு கொண்டு வருவதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும், வெளிவுறத்துறை அமைச்சகம் மற்றும் அமெரிக்காவின் இந்திய தூதரகத்துடன் மாநில தொடர்புகொண்டு பேசி வருவதாக தெரிவித்தார். சரத்கோபு உடலை கொண்டுவருவதற்கான  செலவுகளையும் அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று ராமா ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், கோபுவின் குடும்பத்தினர்கள் அமெரிக்காவிற்கு செல்ல வேண்டுமென்றால், அவர்கள் பயணத்திற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அரசாங்கம் மேற்கொள்ளும் என தெரிவித்தார். 

இந்நிலையில், இது தொடர்பாக, உணவு விடுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கனாஸ்சிட்டி போலீஸார் ஆய்வு செய்தபோது, சந்தேகத்திற்கிடமான முறையில் பிரவுன் கலரின் வெள்ளை கோடிட்ட சட்டை அணிந்த ஒரு நபர் வந்து சென்றது தெரியவந்துள்ளது. 

இதையடுத்து, அந்த காட்சிகளை வெளியிட்டுள்ள போலீஸார், கொலையாளி குறித்து தகவல் தெரிவிப்போருக்கு 10 ஆயிரம் டாலர் சன்மானம் வழங்கப்படும் என கனாஸ்சிட்டி போலீஸார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிவிப்பில். “இந்தியாவைச் சேர்ந்த சரத் கொப்புவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற குற்றவாளியைத் தேடி வருகிறோம். குற்றவாளி குறித்து யாரேனும் தகவல் அளித்தால் அவர்களுக்கு 10 ஆயிரம் டாலர் சன்மானம் அளிக்கப்படும் எனத் தெரிவித்து சிறிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இனவெறி காரணமாக கடற்படை வீரர் ஆடம் புரிங்டன் என்பவரால் ஹைதராபாத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் சீனாவாஸ் குச்சிபோட்லா(32)  கனாஸ்சிட்டியில் உள்ள ஒரு ஹோட்டலில்தான் கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com