மக்களின் வரிப்பணத்தில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர் மோடி: கின்னஸ் அமைப்பிற்கு காங்கிரஸ் கடிதம் 

பொது மக்களின் வரிப்பணத்தில் பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உலக சாதனைப்
மக்களின் வரிப்பணத்தில் உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றவர் மோடி: கின்னஸ் அமைப்பிற்கு காங்கிரஸ் கடிதம் 

பனாஜி:  பொது மக்களின் வரிப்பணத்தில் பல உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை உலக சாதனைப் பட்டியலில் இடம் பெறச் செய்ய வேண்டும் என ’கின்னஸ்’ அமைப்பிற்கு கோவா மாநில காங்கிரஸ் கட்சி செய்தித்தொடர்பாளர் சங்கல்ப் அமோன்கர் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற 4 ஆண்டுகளில் 41 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து 52 நாடுகளை சுற்றிப்பார்த்துள்ளார். இதற்காக 355 கோடி ரூபாய் செல்விடப்பட்டு உலக சாதனை படைத்துள்ளதால்இ  அவரது பெயரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கின்னஸ் சாதனை நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

மேலும்இ இந்திய ரூபாயின் மதிப்பு 69.03 புள்ளிகள் குறைந்துஇ இந்திய ரூபாயின் மதிப்பு ஆசிய நாடுகளிலேயே மிக மோசமாக உள்ளது என்ம் அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி இந்தியாவை விட வெளிநாடுகளிலேயே அதிக நேரத்தை செலவிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com