வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் வரும் 16-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 
வரும் 16-ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


சென்னை: சென்னையில் வரும் 16-ஆம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 16-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மேலும், அன்றைய தினமே அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறும் என்றும் நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரில் முன்வைக்க வேண்டிய முக்கியப் பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com