காற்று மாசுபாட்டால் தலைநகர் தில்லியில் 15 ஆயிரம் பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

தலைநகர் தில்லியில் 2016-ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அசுத்தமான காற்றால்
காற்று மாசுபாட்டால் தலைநகர் தில்லியில் 15 ஆயிரம் பேர் பலி: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

புதுதில்லி: தலைநகர் தில்லியில் 2016-ஆம் ஆண்டில் மட்டும் காற்று மாசுபாட்டின் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் தில்லி 3வது இடத்தை பிடித்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்கள் குறித்து தாய்லாந்து, சிங்கப்பூர் நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், ஐஐடி (மும்பை) ஆராய்ச்சி மாணவர்களுடன் இணைந்து உலகம் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் காற்று மாசுபாடு குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவில், உலகில் அசுத்தமான காற்றால் அதிக மக்கள் உயிரிழக்கும் நகரங்களின் பட்டியலில் தலைநகர் தில்லி 3வது இடத்தை பிடித்துள்ளது தெரியவந்துள்ளது. காற்றில் கலந்துள்ள நச்சு துகள்களால் தில்லியில் மட்டும் 14 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நச்சு கலந்த நுண் துகள்களை சுவாசிக்கும்போது அவை நுரையீரலிலேயே தங்கிவிடுகின்றன. இதனால் இருதய நோய்கள், பக்கவாதம், நுரையீரல். புற்றுநோய், சுவாசக் கோளாறு உள்ளிட்ட பல்வேறு சுகாதர விளைவுகள் தொடர்புடைய நோய்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இந்த ஆய்வு பட்டியலின் படி,  பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் முதல் இரண்டு இடங்களைப் பிடித்துள்ளன. 2016-ஆம் ஆண்டில் பெய்ஜிங்கில் 18 ஆயிரத்து 200 பேரும், ஷாங்காய் 17 ஆயிரத்து 600 பேரும் உயிரிழந்ததாகவும், பாகிஸ்தானின் கராச்சியில் 7 ஆயிரத்து 700 பேரும், மும்பையில் 10 ஆயிரத்து 400 பேரும், கொல்கத்தாவில் 7 ஆயிரத்து 300 பேரும், பெங்களூரு மற்றும் சென்னையில் மொத்தம் 4 ஆயிரத்து 800 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ஆராய்ச்சியின்படி ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் காற்று மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படுவதாகவும்,  காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான கூட்டு பிராந்திய முயற்சிகளையும், நிரந்தரமான காற்று தர இலக்குகளை அமைப்பதற்கான தேவையையும் இந்த ஆய்வு வலியுறுத்தியுள்ளது.

காற்று மாசுபாடு மக்களின் உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள நிலையில், அதனை வெற்றிக்கொள்ளும் விதமாக மாசுபாட்டை தவிர்ப்பதற்கான ஒரு வலுவான திட்டத்தினை மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் வகுத்து வருவதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com