பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம்: மனோகர் பாரிக்கர் அதிரடி உத்தரவு

பொது இடங்களில் மது அருந்தினால் ரூ.2,500 அபதாரம் விதிக்கப்படும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். 
பொது இடங்களில் மது குடித்தால் ரூ.2,500 அபராதம்: மனோகர் பாரிக்கர் அதிரடி உத்தரவு


பனாஜி: பொது இடங்களில் மது அருந்தினால் ரூ.2,500 அபதாரம் விதிக்கப்படும் என்று கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் அதிரடியாக அறிவித்துள்ளார். 

கடற்கரைகள், நெடுஞ்சாலைகள் என பொதுஇடங்களில் மதுபாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள் வீசப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் அதிகரித்தன. இதையடுத்து பிளாஸ்டிக் கவர்கள் உபயோகிப்போருக்கு அபராதமாக ரூ.100 வசூலிக்கப்பட்டு வந்தது. இதனிடையே மதுபோதையில் சுற்றித்திரிபவர்களால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும் தொடர்ந்து புகார் எழுந்தது.

இந்நிலையில், கோவாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்று முதல்வர் மனோகர் பாரிக்கர் கலந்துகொண்டு பேசுகையில், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் இனி மது அருந்தினால் கடுமையான அபராதம் விதிக்கப்படும். அப்படி யாராவது மது அருந்துவது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு ரூ.2,500 அபராதம் விதிக்கப்படும். இந்த நடைமுறை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார். 

மேலும், பிளாஸ்டிக் கவர்கள் உபயோகிப்போருக்கு அபராதமாக வசூலிக்கப்படும் தொகை ரூ.100-ல் இருந்து ரூ.2,500 ஆக உயத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

பனாஜியில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் மது அருந்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com