உண்மையை உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த்: நமது அம்மா நாளிதழ் பாராட்டு

உண்ணையை உரக்கச் சொல்லியிருக்கும் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் என்று நமது அம்மா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.
உண்மையை உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த்: நமது அம்மா நாளிதழ் பாராட்டு


சென்னை: உண்ணையை உரக்கச் சொல்லியிருக்கும் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் என்று நமது அம்மா நாளிதழ் பாராட்டு தெரிவித்துள்ளது.

எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் நாட்டுக்கும் நலம் பயக்கும் திட்டம் என தெரிவித்த நடிகர் ரஜினிகாந்தை ‘உரக்கச் சொன்ன உச்ச நட்சத்திரம்’ என்ற தலைப்பில் நமது அம்மா நாளிதழில் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

கட்டுரையில், எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டம் "நாட்டுக்கு நலம் பயக்கும் திட்டம்" என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உண்ணையை உரக்கச் சொல்லியிருக்கிறார். மேலும் கழக அரசின் கல்வி புரட்சியையும் அவர் வெகுவாக பாராட்டியும் இருக்கிறார். இது அரசியலுக்கு அப்பாற்பட்ட அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.

உச்சி வெளில் அடித்தாலும், ஓங்கி மழை கொட்டினாலும், அத்தனைக்கும் காரணம் ஆளுங்கட்சிசான் என்று எதற்கெலுத்தாலும் எதிர்ப்புத் தெரிவிக்கிற உள்நோக்க சக்திகளுக்கு மத்தியில் அரசியல் சுய லாபங்களை தவிர்த்து, தமிழக அரசின் நன்நோக்கத்தை ரஜினிகாந்த் உரைக்கல்லாக நின்று உரசிப்பார்த்து வரவேற்றிருப்பது பாராட்குரியது.

ஏற்கனவே, தூத்துக்குடி ஸ்டெர்லைட் கலவர விவகாரத்திலும், அரசின் மீது அபாண்ட பழிபோட்டு அரசியல் லாபம் தேட திமுக உள்ளிட்ட கட்சிகள் வெறிகொண்டு அலைந்த நிலையில் அப்போதும் ரஜினிகாந்த் களத்தின் உண்மையை உள்வாங்கி நிஜத்தையே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காவேரி உரிமையை வென்றெடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு முற்று வைத்து, ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு விடை கொடுத்தது, பிளாஸ்டிக் அரக்கனுக்கு தடை போட்டது, நீர் நிலைகளை தூர் வாரியது, நீர்பானம் கொண்டு வந்தது. சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் சமரசம் கொள்ளாமல், ரவுடிகளை வேட்டையாடி அமைதியை நிலைநாட்டுவது... என்றெல்லாம் திடமாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, தமிழகத்தை வளர்ச்சிப் பாதை நோக்கி அழைத்து செல்லும் எடப்பாடியார் அரசின் தூய்மையான தொண்டுள்ளத்திற்கு இதுபோன்ற உச்ச நட்சத்திரங்களின் பாராட்டு என்பது மேலும் ஊக்கத்தை தரும் தானே... வரவேற்போம்... வாழ்த்துவோமே என்று அந்த கட்டுரையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதிமுக அரசுக்கு ஆதராக ரஜினிகாந்த் கருத்துகளை சொல்வதும், அதிமுக ரஜினிகாந்தை பாராட்டுவதும் ஏன்? என்பது தெரியாமல் அரசியல்வாதிகள் குழப்பத்தில் இருக்க... அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com