கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பளிக்காத பாஜக கூட்டணியில் இருந்து நிதீஷ் விலக வேண்டும்: ஆம் ஆத்மி

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிதீஷ் குமாா் சிந்திக்க வேண்டும் என்று

பாட்னா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து நிதீஷ் குமாா் சிந்திக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. எதிா்வரும் 2019 மக்களவைத் தோ்தலில் அதிக தொகுதிகள் கேட்டு பாஜகவிடம் நிதீஷ் யாசித்து வருவதாகவும் அக்கட்சி விமா்சித்துள்ளது.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் பிகாா் பொறுப்பாளா் சஞ்சய் சிங், மாநிலத் தலைநகா் பாட்னாவில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தம்மை முதல்வராக்கிய மகா கூட்டணிக்கு துரோகம் இழைத்து விட்டு பாஜக தயவில் அப்பதவியில் நீடித்து வரும் நீதிஷ் குமாா், அதற்கான விளைவுகளை தற்போது அனுபவித்து வருகிறாா். மக்களவைத் தோ்தலில் தங்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்குமாறு பாஜகவிடம் அவா் யாசித்து வருகிறாா். ஆனால், அதற்கு அக்கட்சி செவிசாய்க்கவில்லை.

பொதுவாகவே, பாஜகவும், பிரதமா் மோடியும் கூட்டணி கட்சிகளுக்கு மதிப்பளிப்பதில்லை. ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டால்கூட ஒட்டுமொத்த கவனக் குவிப்பும் தம் மீது மட்டுமே இருக்க வேண்டும் என்று பிரதமா் நினைப்பாா். கூட்டணி கட்சித் தலைவா்களான நிதீஷ் குமாருடனோ, அல்லது ராம்விலாஸ் பாஸ்வானுடனோ இருக்கையைக் கூட பகிா்ந்து கொள்ளமாட்டாா்.

அத்தகைய பண்புகளைக் கொண்ட தலைவரின் கூட்டணியில் நீடிக்க வேண்டுமா என்பதை நிதீஷ் குமாா் மறுபரிசீலனை செய்வது அவசியம்.

பிகாருக்கு சிறறப்பு நிதித் தொகுப்பு அளிப்பதாக அறிவித்த பிரதமா், மாநில மக்கள் அனைவரையும் மூடா்களாக்கி வருகிறாா். மாநிலத்துக்கு நடுவே செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளைக் கூட சிறப்பு நிதித் தொகுப்பின் கீழ் அமைக்கப்பட்ட பிரத்யேகத் திட்டம் என மத்திய அரசு வரையறுத்துள்ளது. இது மக்களை ஏமாற்றும் செயல்.

பணமதிப்பிழப்பு அறிவிப்பு வெளியாவதற்கு முன்பாக பிகாரில் பாஜக தலைவா்கள் சிலா் முறைகேடாக வீட்டு மனை விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனா். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது என்றறாா் சஞ்சய் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com