திமுக ஆட்சிக்கு வராது என அழகிரியே கூறிவிட்டார்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேட்டி

தமிழக உரிமைகளை எப்போதும் அதிமுக விட்டுக்கொடுக்காது. மாநில நலனுக்காக
திமுக ஆட்சிக்கு வராது என அழகிரியே கூறிவிட்டார்: அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேட்டி

மதுரை: திமுக ஆட்சிக்கு வராது என மு.க. அழகிரியே கூறிவிட்டார். நாட்டின் அடுத்தத் தலைவராக ராகுல்காந்தி உருவாகியுள்ளார் என, கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ செய்தியாளா்களிடம் கூறியதாவது:

 மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதி மாவட்ட அளவில் பெரிய தொகுதியாகும். இதில் உள்ள 15 மாமன்றற வார்டுகளிலும் தொடா்ந்து பணிகளை வார்டு உறுப்பினா் போல செய்துவருகிறேன். தற்போது நடைபெற்று வரும் சீரமைப்புப் பணிகளால் பொன்மேனி, என்.எஸ்.கே. நகா் ஆகிய பகுதிகளில் இனிமேல் குடிநீரில் கழிவு நீா் கலக்காது. 

பாஜக தலைவா் அமித்ஷா கேட்டுக்கொண்டதால், மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு எதிராக அதிமுக வாக்களித்தது. தமிழக உரிமைகளை எப்போதும் அதிமுக விட்டுக்கொடுக்காது. மாநில நலனுக்காக மத்திய பாஜக அரசு நிதி வழங்கி வருகிறது. எனவே, பாஜகவுக்கு ஆதரவளித்ததில் தவறில்லை. 

தமிழகத்தில் ஊழல் என்று பாஜக தலைவா் அமித்ஷா பொதுவாகக் குறிப்பிட்டார். அதிமுக அரசைக் குறிப்பிட்டு அவா் கூறவில்லை. ஊழல் என்பது எல்லா காலங்களிலும் உள்ளது. ஆனால், தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால், அவை உடனுக்குடன் வெளியே தெரிகிறது. தமிழக ஊழலுக்கு திமுகவே காரணம் என்பதை அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

 அதிமுகவினருக்கு மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. முதல்வா் நல்ல திட்டங்களை செயல்படுத்துவதால், அரசு மீது குறைற கூறமுடியாது.

 காங்கிரஸ் தலைவா் ராகுல்காந்தி நல்ல பண்பாளா், நன்றாகப் பழகுகிறார். அவரது தந்தை வழியில் அவா் நாட்டின் அடுத்தத் தலைவராக உருவாகியுள்ளார். பிரதமரை அவா் கட்டித் தழுவியது அரசியல் நாகரீகம். 

மக்களவைத் தோ்தலில் அதிமுக அனைத்துத் தொகுதியிலும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து அதிமுக முதல்வா், துணை முதல்வா் முடிவு செய்வா்.

வைகை அணை அடுத்தாண்டு தூா்வாரப்படும். வைகை நதியில் கழிவுநீா் கலப்பது தடுக்கப்படும். திமுக ஆட்சிக்கு வராது என மு.க. அழகிரியே கூறிவிட்டார் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com