மோடியை கட்டித்தழுவி விஷ ஊசி செலுத்தப்பட்டதா..?: சர்ச்சையை கிளப்புகிறார் சுப்பிரமணியன் சுவாமி 

ராகுல் காந்தி தம்மை கட்டிப்பிடிக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கக்கூடாது என்று பாஜக மாநிலங்களவை
மோடியை கட்டித்தழுவி விஷ ஊசி செலுத்தப்பட்டதா..?: சர்ச்சையை கிளப்புகிறார் சுப்பிரமணியன் சுவாமி 

ராகுல் காந்தி தம்மை கட்டிப்பிடிக்க பிரதமர் மோடி அனுமதித்திருக்கக்கூடாது என்று பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் மக்களவையில் வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், காரசரமான விவாதத்துக்குப் பிறகு தோல்வி அடைந்தது.

மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நேற்று மக்களவையில் கொண்டு வரப்பட்டது. அப்போது, பிரதமரின் வெளிநாடு பயணம், கருப்பு பணம், பணமதிப்பிழப்பு குறித்து பேசிய ராகுல், மோடியை நம்பிய லட்சக்கணக்கான இளைஞர்களை, 24 மணி நேரத்துக்கு 400 பேருக்கு மட்டுமே மோடி அரசாங்கம் வேலைவாய்ப்பை வழங்கி ஏமாற்றி உள்ளது. என் கண்ணைப் பார்த்து பிரதமர் பேச வேண்டும்; அதை அவர் தவிர்க்கிறார். பிரதமரின் சிரிப்பில் ஒரு பதற்றம் தெரிகிறது. நீங்கள் என்னை பப்பு என்றழைக்கலாம்' என ராகுல் கடுமையாக விமர்சனம் செய்த ராகுல், பேச்சின் முடிவில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம், மோடியின் இருக்கைக்குச் சென்று, அவரை கட்டித்தழுவினார். இதை சற்றும் எதிர்பாராத மோடி ஒரு நொடி ஆச்சரியத்தில் பார்த்து விட்டு பின்பு தனது இருக்கைக்கு சென்ற ராகுலை மோடி அழைத்து உரைக்காக கைகுலுக்கி காதில் ஏதோ முணுமுணுத் வாழ்த்து தெரிவித்தார். ராகுலின் இந்தச் செயல், நேற்று மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு தன இருக்கைக்கு சென்ற ராகுல் கண்ணை சிமிட்டி ஆச்சர்யப்படுத்தினார்.

இந்த நடவடிக்கைக்கு மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், இதுபோன்ற செயல் அவையின் மாண்பு மற்றும் ஒழுக்கத்தை கெடுப்பதாகவும், பிரதமர் பதவிக்கான மாண்பையும் அவை குறைத்து விட்டது. ராகுல் நடந்து கொண்ட விதம் சரியில்லை. இருக்கைக்கு வந்து உட்கார்ந்த பிறகு கண் அடிப்பது, பேசிக்கொண்டிருப்பது சரியில்லை. அவையின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்று கண்டித்தார்.

இதுகுறித்து பரபரப்பு தகவலுக்கு சொந்தகாரரும், பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் பக்க பதிவில் சர்ச்சையை எழுப்பும் விதமாக ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், 

ராகுல் காந்தி தம்மை கட்டிப்பிடிக்க பிரதமர் அனுமதித்திருக்கக்கூடாது என்றும், ரஷ்யர்கள், வட கொரியர்களும்  மற்றவர்கள் மீது விஷ ஊசியை செலுத்த இந்த நுட்பத்தை கடைபிடிப்பார்கள். அதனால் பிரதமர் மோடி விரைவாக மருத்துவமனை சென்று சுனந்தா புஷ்கர் கையில் இருந்தது போல தம் மீது ஏதாவது விஷ ஊசி செலுத்தப்பட்டிருக்கிறதா என்று சோதனை செய்யவேண்டும் என தெரிவித்துள்ளார். இது பெரும் சர்ச்சையை எழுப்பி உள்ளது. 

ராகுலின் செயலை சிலர் வரவேற்றும் கண்டித்தும் உள்ளனர். ஆனால், ராகுல் மோடியை கட்டிப்பிடித்தது தவறு என்றால் அதே தவறை மோடி வெளிநாடுகளில் செய்தால் மட்டும் கண்டுக்கொள்ளாமல் இருப்பது ஏன்? என்று சமூக ஊடகங்களில் கேள்வி எழுந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com