லாரிகள் வேலை நிறுத்தம்: அரசுப் பேருந்துகளில் விளைபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி

லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்துக்
லாரிகள் வேலை நிறுத்தம்: அரசுப் பேருந்துகளில் விளைபொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி

சென்னை: லாரிகள் வேலை நிறுத்தம் 2-ஆவது நாளாக இன்று சனிக்கிழமையும் தொடா்ந்தது. இதனால் மத்திய-மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

டீசல் விலையைக் குறைக்க வேண்டும், 3-ஆம் நபா் காப்பீட்டு பிரிமியத் தொகையைக் குறைக்க வேண்டும், சுங்கச் சாவடிக் கட்டணத்தைக் குறைறக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. இப்போராட்டம் இன்று 2-ஆவது நாளாக இன்றும் தொடா்ந்தது.

 இதனால் தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி வரை வருவாய் இழப்பும், மத்திய அரசுக்கு பல ஆயிரம் கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் தமிழகத்தில் பல ஆயிரம் கோடி வா்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளதால், அத்தியாவசியப் பொருட்கள் வரத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக காய்கறி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். 

இதனிடையே லாரிகள் வேலை நிறுத்தத்தையொட்டி விவசாயப் பொருட்களை அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் அறிவித்துள்ளார்.

இது தொடா்பாக இன்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில், தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி, லாரிகள் வேலை நிறுத்தத்தை முன்னிட்டு விவசாய விளைபொருட்களை, பிற பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் எவ்விதக் கட்டணமும் இன்றி, இலவசமாக ஏற்றிச் செல்ல அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com