2019-ல் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும்: ப.சிதம்பரம்

வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும் என்றும் ஒருமித்த கருத்துடைய மாநில கட்சிகளுடன்
2019-ல் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும்: ப.சிதம்பரம்

புதுதில்லி: வரும் 2019 மக்களவைத் தேர்தலில் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும் என்றும் ஒருமித்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார். 

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள, கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தில்லியில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், "காங்கிரஸ் கட்சியின் பங்கு என்பது அது இந்தியாவின் குரலாக ஒலிக்க வேண்டும். மேலும் நிகழ்காலம் மற்றும் வருங்காலத்தின் பொறுப்பு அதற்கு உள்ளது.

இந்தியாவின் கல்வி நிலையங்கள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் மற்றும் ஏழை மக்கள் மீது பாஜக நடத்திய தாக்குதலை நினைவு கூர்ந்த ராகுல், காங்கிரஸ் கட்சியின் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக  எழுந்து போராட வேண்டியது காங்கிரஸ் கட்சியினரின் பங்கு என்று வலியுறுத்தினார். 

சுதந்திரப் போராட்ட கால கட்டத்தில் இந்த காரியக் கமிட்டி உருவானது. இந்த மன்றத்தில் தான், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக விவாதித்தது, கருத்துகளை வெளியிட்டது, போட்டியிட்டது, கருத்துகளை ஒன்றிணைத்தது. ஒவ்வொரு இந்தியனிடமும் காங்கிரஸ் காரியக் கமிட்டி தனது குரலை கொண்டு சேர்த்தது. அது இந்தியாவின் பல பார்வைகளை ஒருங்கிணைத்தது, மேலும் இந்தியாவின் வலுவிழந்த குரல்களுக்கும் அது இடமளித்தது.

நமது கூட்டு சவாலே தற்போதைய காரியக் கமிட்டியை அந்த அளவுக்கு கொண்டு செல்வது தான்.

காரியக் கமிட்டியில் இளைஞர் மற்றும் அனுபவம் உள்ளவர்களிடம் சமநிலையை கொண்டு வர முயன்றுள்ளோம். இதில், "அனுபவமும் ஆற்றலும் கொண்ட கமிட்டி. அது கடந்த காலத்திற்கும், நிகழ்காலத்திற்கும் மற்றும் எதிர்காலத்தையும் இணைக்கும் பாலமாக அமையும்" என்று ராகுல் பேசினார்.  

அவரது பேச்சுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், 

காங்கிரஸ் தற்போது மக்களவையில் 48 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 12 மாநிலங்களில் காங்கிரஸ் வலுவாக உள்ளதால், 2019 மக்களவைத் தேர்தலில் தனித்து 150 இடங்களில் வெற்றிபெற முடியும் என்றவர் மாநிலங்களில் கட்சியின் பலத்தை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.  

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் ஒருமித்த கருத்துடைய மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும். மாநிலங்களில் உள்ள மூத்த தலைவர்கள் கட்சியின் நிலைப்பாட்டை மேம்படுத்துவதற்காக மாநில கூட்டணிக் கட்சிகளுடன் ஒருங்கிணைப்புக்காக பாடுபட வேண்டும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com