நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி செலுத்தும் வருமான வரி எவ்வளவு தெரியுமா..? 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி செலுத்தும் வருமான வரி எவ்வளவு தெரியுமா..? 


ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி உள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெற்றுவிட்டாலும், மற்ற போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 

இந்நிலையில், பிகார், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக தோனி உள்ளார் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த 2016 - 17-ம் நிதி ஆண்டில் 10 கோடியே 93 லட்சம் வரியாக செலுத்திய நிலையில், ஷஷ2017 - 18 -ஆம் நிதி ஆண்டில் ரூ.12 கோடியே 17 லட்சம் வரியாக செலுத்தி பிகார், ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்தும் நபராக தோனி உள்ளார். ரூ.3 கோடியை அடுத்த நிதி ஆண்டுக்கான வருமான வரிக்காக அவர் முன்கூட்டியே செலுத்தி விட்டதாகவும் வருமான வரித்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னதாக 2013-ஆம் நிதி ஆண்டிலும் தோனி அதிக அளவு வருமான வரி செலுத்தினார்" என்று கூறினார். 

இதற்கிடையே, இந்திய அளவில் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்களில் தோனியும், கோலியுமே முதலிடத்தில் உள்ளனர். கடந்த 2015-ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட பணக்கார விளையாட்டு வீரர்கள் பட்டியலில் தோனி இடம் பெற்றிருந்தார். அப்போது அவரது சொத்து மதிப்பு 111 மில்லியன் டாலர் என்றும், இந்த வருடம் மட்டும் 31.5 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டினார் எனவும் ஃபோர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. 

இதேபோல் ஐ.எஸ்.எல் கால்பந்துப் போட்டியில் சென்னையின் எப்ஃசி அணியின் உரிமையாளர்களில் ஒருவராகவும் உள்ளார். அதேபோல் ஷஹாக்கி இந்தியா' தொடரில் விளையாடும் ராஞ்சி ராய்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, தோனி இந்தியாவில் மூன்றாவது மிக அதிக சம்பளம் பெறும் வீரராக உள்ளார், 2017 -ஆம் ஆண்டில் இந்தியாவின் மிக உயர்ந்த வருவாய் கொண்ட பிரபலங்களின் பட்டியலில், 63 கோடியே 7 லட்சம் வரியாக செலுத்தி நாட்டில் 8-வது இடத்தில் உள்ளார். 

தோனி தனது ஆடை வரிசையை 2017 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியுள்ளார். அவர் இந்திய சூப்பர் லீக்கில் சென்னயீன் எஃப்.சி கால்பந்து உரிமையாளராகவும் உள்ளார். அவர் ஹாக்கி இந்தியா லீக்கில் ராஞ்சி ரேஸ் உரிமையாளரின் கூட்டு உரிமையாளராவார்.

ஆஸ்திரேலியாவின் 2014-ஆம் ஆண்டு சுற்றுப்பயணத்தின் நடுவில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com