2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே நோக்கம்: மோடி பேச்சு

2022-ஆம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை
2022-க்குள் அனைவருக்கும் வீடு வழங்குவதே நோக்கம்: மோடி பேச்சு


புதுதில்லி: 2022-ஆம் ஆண்டு இந்தியாவின் 75வது சுதந்திரதினத்தில் ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்த வீடு இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டு மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய அரசின் வீட்டு வசதித் திட்ட (ஆவாஸ் யோஜனா) பயனாளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் உரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், திட்டங்களை நிறைவேற்றும் விதத்தை மேம்படுத்துவதில் பயனாளிகளுடனான உரையாடல்கள் உதவிகரமாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். 

ஒவ்வொரு மனிதனும்  சொந்தமாக வீடு கட்ட  விரும்புகிறான். அவர் அல்லது அவள் ஒரு சொந்த வீட்டில் இருக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஆவாஸ் யோஜனா செங்கல் மற்றும் சாந்து பற்றியது மட்டுமல்ல. இது வாழ்க்கையின் சிறந்த தரம் மற்றும் கனவுகள் நிறைவேற்றுதாக உள்ளது. 

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களில் மட்டுமே பயனாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக குறிப்பிட்ட பிரதமர், தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் திட்டம் நிறைவேற்றப்படுவதால் பயன்பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

இந்த திட்டத்திற்காக பயணாளர்களுக்கு முன்பு ரூ.70 ஆயிரம் முதல் 75 ஆயிரம் வழங்கப்பட்டது, ஆனால், இப்பொழுது பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், ரூ.1.30 லட்சம் வரை அதிகரித்து வழங்கப்பட்டு வருகிறது என்றார்.

கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஏழை பெண்களை சென்று சேருவதை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

"இந்த திட்டத்தின் மூலமாக, மக்களுக்கு வேலைவாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன, அதே நேரத்தில் வீடுகளை மேம்படுத்துவதற்கும் சிறந்த மற்றும் சிறந்த தரம் வாய்ந்த கட்டுமானத்தை மேம்படுத்துவதற்காக திறமைகளை விரிவுப்படுத்தி உள்ளோம் என பிரதமர் தெரிவித்தார்.

இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில், வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு உழைத்து வருகிறது என்றார். 

இந்த யோஜனா திட்டத்தின் மூலம், மத்திய பாஜக ஆட்சியில் குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வீட்டு வசதி திட்டத்திற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது.

மக்கள் அனைவருக்கும் தரமான மின்சாரம், குடிநீர் வசதியுடன் வீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதன்படி, குறைந்த விலையில் ஏழைகளுக்கு 50 லட்சம் வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது என்று மோடி கூறினார். 
  
மேலும், சத்தீஸ்கர், தமிழ்நாடு, உத்திரபிரதேசம், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களை சேர்ந்த பயனாளிகளுடன் பேசுகையில், புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றை உட்கொள்வதைத் தவிர்க்குமாறு  பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com