விளை நிலங்களின் வழிகாட்டு மதிப்பை மூன்று மடங்காக உயர்த்த தமிழக அரசுக்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் வேண்டுகோள்

விளை நிலங்களின் வழிகாட்டு மதிப்பை மூன்று மடங்காக  உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விளை நிலங்களின் வழிகாட்டு மதிப்பை மூன்று மடங்காக உயர்த்த தமிழக அரசுக்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் வேண்டுகோள்

விளை நிலங்களின் வழிகாட்டு மதிப்பை மூன்று மடங்காக  உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொழில்நுட்ப வல்லுனர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் நடக்கும் பல பிரச்னைகளின் மூல காரணங்களாக விவசாயம் இருந்து வருகிறது பிரச்னைகளை மையப்படுத்தி ஏராளமான போராட்டங்கள் நாடு முழுதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றால் விவசாயிகளின் பிரச்னைகள் தீர்க்கிறது என்றால் பெரும்பாலும் இல்லை என்றுதான் கூறவேண்டும். காரணம் பிரச்னைக்கான காரணங்களுக்கும் போராட்டங்களின் நோக்கங்கள் மற்றும் அணுகுமுறைகளுக்குமான இடைவெளிதான்.

இப்போது நடக்கும் பல போராட்டங்களின் காரணம் விவசாயத்தை, குறிப்பாக சிறு குறு விவசாயிகளின், அழிப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. விவசாயிகளின் வாழ்வாதாரம், வாழ்க்கை பெரியளவு பாதிக்கப்படும் என்பதுதான். விவசாயிகளின் நீராதாரத்தில், உற்பத்தியில், தரத்தில், விலையில், விவசாய பணிகளை செய்வதில் உள்ள தடைகள், பிரச்சனைகள் விவசாயம் செய்வதற்கு உகந்ததல்லாததாக  விரும்பத்தகாததாக மாற்றியிருக்கின்றன. இதனால் உபயோகமில்லாமல் இருக்கும், எதிர்க்காலம் இல்லாமல் இருக்கும் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்பதற்கு விவசாயிகள் தள்ளப்பட்டிருக்கின்றனர் என்பது நிதர்சனமான உண்மை, இதுதான் விவசாயம் அல்லாத பிற தொழில்களுக்கு விவசாய நிலங்களை பெரிய நிறுவனங்கள்  வாங்குவதும், கையகப்படுத்துவதும் சமீபகாலமாக அதிகரித்துவருவதற்கு காரணம்.

மேற்சொன்ன விவசாயிகளின் பிரச்னைகளை தீர்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஒட்டு மொத்த தீர்வு போர்க்கால அடிப்படையில் செயல்படுத்தப்படவேண்டியது அவசியம். ஆனால் விவசாயிகளின் பிரச்னைகளை தற்காலிகமாக தீர்ப்பதற்கு, விவசாயிகளுக்கு உடனடியாக நம்பிக்கை வழங்குவதற்கு ஒரு எளிமையான தீர்வு உள்ளது.  நிகர வருமானத்தை இரட்டிப்பாகும் விதமாக அரசு பலவித முயற்சிகளை எடுத்துவருகிறது. அதனடிப்படையில் விவசாய நிலங்களின் வழிகாட்டு மதிப்பை மூன்றுமடங்காக அதிகரிப்பது என்பது மிகச்சிறந்த செயலாக இருக்கும். தற்போது நடக்கும் பல பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும்.

விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக உயரும்போது அதனடிப்படையில் வழிகாட்டு மதிப்பை மாற்றியமைப்பது இன்றியமையாதது. இதனால் விவசாயிகளுக்கு விவசாயத்தின் மீதும், அரசின் விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாகும் திட்டம் மீதும் நம்பிக்கை வரும். விவசாய நிலங்களை விற்கும் கட்டயத்தில் இருக்கும் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

விவசாய நிலத்தின் விலை மூன்று மடங்காகும் போது அவற்றை வாங்குவதற்கு நடக்கும் வர்த்தக நிறுவனங்களின் வேகம் குறையும். ஏனெனில், தற்போது இருக்கும் விளைநிலங்களின் விலைகள் வர்த்தக நிறுவங்களுக்கு எளிதில் அதிக லாபம் தரும் விதமாக அமைந்துள்ளது. ஆனால் விலை மூன்று மடங்காக அதிகரிக்குமானால், விவசாய நிலங்களை வாங்குவதன்மூலம் லாபம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். லாபத்தின் அளவு பெருமளவு குறையலாம். இதனால் விவசாய நிலங்களை வாங்குவதில் உள்ள ஆர்வம் குறையும். இதனால் விவசாய  நிலங்கள், விவசாயிகளின் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாகும் அரசின் முயற்சி வெற்றியடையும்போது அதன் பலனை அனுபவிப்பதற்கு விளைநிலங்கள் விவசாயிகளிடம் இருக்கும். அரசு இந்த வேண்டுகோளை ஏற்று விவசாய விளைநிலங்களின் வழிகாட்டு மதிப்பை உயர்த்த வேண்டும் என்று தமிழக தொழில்நுட்பவல்லுனர்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 

- திருச்செல்வம் ராமு

Mission IT-Rural (www.it-rural.com)

தொடர்புக்கு - 98403 74266.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com