ஆந்திராவின் கோரிக்கைக்கு ஆதரவாக நிதிஷ். மம்தா பேச்சு 

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தை நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு,
ஆந்திராவின் கோரிக்கைக்கு ஆதரவாக நிதிஷ். மம்தா பேச்சு 

புதுதில்லி: ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் விவகாரத்தை நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்பிய அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, அதற்கு ஆதரவு தருமாறு மம்தா பானர்ஜி, நிதிஷ் குமார், பினரயி விஜயன், குமாரசாமி உள்ளிட்ட முதல்வர்களிடம் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இன்றைய நிதி அயோக் கூட்டத்தில் நாயுடுவின் கோரிக்கைக்கு ஆதரவாக நிதிஷ் குமார், மம்தா ஆதரவு அளித்து பேசினர். 

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளும் நிதி ஆயோக் கூட்டம் தில்லியில் இன்று நடந்தது. 

பாஜக கூட்டணியில் இருந்து விலகிய பிறகு சந்திரபாபு நாயுடு, இன்று தான் பிரதமர் மோடியை நேருக்கு நேர் சந்தித்தார். 

இந்த கூட்டத்தில், ஆந்திரா மாநில பிரிவினை, சிறப்பு அந்தஸ்து வழங்காதது, ஜிஎஸ்டி, பொல்லாவரம் திட்டம் மற்றும் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து நாயுடு கேள்வி எழுப்பினார்.

நிதி ஆயோக் கூட்டத்தில், பிகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசுகையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறேன். அதேபோல், பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். 

மேற்குவங்க முதல்வர் மம்தா பேசுககையில், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் நிதிஒதுக்கீடு என்ற 15வது நிதிக்குழுவின் கோரிக்கை ஏற்று சிறப்பாக செயல்படும் மாநிலங்களை தண்டிக்கக்கூடாது என்ற சந்திரபாபுவின் கோரிக்கைக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆதரவு தெரிவித்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, நிதி ஆயோக் கூட்டத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் குறித்து ஆந்திரா மாநில அதிகாரிகள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து தனக்கு ஆதரவு தரும்படி, நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தில்லி வந்திருந்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரள முதல்வர் பினராயி விஜயன், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்டோரையும் சந்திரபாபு சந்தித்து ஆதரவு கோரியிருந்தது 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com